தொடர்ச்சியான போராட்டமே வெற்றிதரும் நிரூபித்த கம்யூ. கட்சி

0

தொடர்ச்சியான போராட்டமே வெற்றிதரும் நிரூபித்த கம்யூ. கட்சி

டிசம்பர் 2020  திடுமென ஒருநாள் சென்னை தீவுத்திடலில் அதிகாரிகள் வந்தனர். போலீஸ் குவிக்கப்பட்டனர். தகவல் கேள்விப்பட்டதும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா  சம்பவ இடத்துக்குச் சென்றார். பொதுப் பணித்துறை அதிகாரிகள் இயந்திர ங்களுடன் பல காலமாக அங்கு வாழ்ந்திருந்த மக்களை தூக்கி பெரும்பாக்கத்துக்கு எறிய, வீடுகளை இடிக்கும் வேலைக்கு ஆயத்தமாகினர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

டிசம்பர் 2020 சென்னை தீவுத்திடலில் இடிக்கப்பட்ட குடிசை வீடுகள்

அச்சமயத்தில்தான் அங்கு வாழும் மக்களில் சிலர் கூவம் நதிக்குள் இறங்கிப் போராடத் தொடங்கினர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் கவலைப்படவில்லை. பணிகள் தொடர உத்தரவிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்று எதிர்த்துக் கொண்டிருந்தது. பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் அந்த மக்களிடம் ‘ஆளைக் கூப்பிட்டு வந்தீங்களா.. பெரும்பாக்கத்துல வீடு அலாட் பண்ண என் கால்ல விழுந்து உங்கள கெஞ்ச வைக்காம விட மாட்டேன்’ என சூளுரைத்தார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

களத்தில் கம்யூனிஸ்டுகள் இயங்க, சமூகதள கம்யூனிஸ்டுகள் அங்கு நேர்ந்த செய்திகளையும் காணொளிகளையும் பரப்பிக் கொண்டி ருந்தோம். சமூகதளத்திலிருந்து செய்தியை செய்தி நிறுவனங்கள் எடுத்தன. கூவத்தில் நின்று மக்கள் நடத்தியப் போராட்டக் காணொளி தொலைக் காட்சிகளை நிறைத்தது. மக்களின் கவனத்துக்கு தீவுத்திடல் பிரச்சினை கொண்டு வரப்பட்டது. செய்தியைக் கேள்விப்பட்டு இயக்குநர் பா. ரஞ்சித் சம்பவ இடத்துக்கு வந்தார். செல்வாவிடம் நிலவரத்தைக் கேட்டறிந்தார்.

ஜி. செல்வா மத்திய சென்னை மாவட்ட செயலாளர்

ரஞ்சித்தைப் பார்த்ததும் கேமராக்கள் சூழ்ந்தன. அவர் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ‘ஓட்டுக்கு மட்டும் வர்ற கட்சிங்க எதுவும் இப்போ இங்கக் காணோம்!’ என்றார். நீலம் ட்விட்டர் கணக்கு இதே வாக்கியத்தை வைத்து ட்வீட் இட்டிருந்தது. அதில் இடப்பட்டிருந்த புகைப்படத்தில் ரஞ்சித் இருந்தார்.  அவருக்குப் பின்னால் செல்வா! கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தோருக்கு ஷாக். இந்த ‘ஸ்டேட்மெண்ட்’டை என்னவாக எடுத்துக் கொள்வது? சொல்வதோ கம்யூனிஸ்டுகள் தோழமையுடன் நினைக்கும்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரைடக்டர் பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்! தோழர் கனகராஜ் கருப்பையா ‘ஒருநாள் வந்தது நன்றே. ஒவ்வொரு நாளும் வந்தாரை மறைத்தல் அத்தனை நன்றா?’ என முகநூலில் பதிவு எழுதினார். அதிகமாகப் பதிவு பகிரப்பட்டது. ரஞ்சித்தின் பார்வைக்கும் அது சென்றது. பிறகு அவர் செல்வாவையும் கனகராஜையும் தொடர்பு கொண்டு ‘கம்யூனிஸ்ட் கட்சியை தான் சொல்லவில்லை’ என விளக்கம் கொடுத்தார். ஆனால் பொது வெளியில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. நீலம் ட்வீட் ஏகப்பட்ட பகிர்வுகளை எட்டியிருந்தது.

விவாதத்தை  முற்றுப் புள்ளிக்குக் கொண்டு வர, ஓபிஎஸ்ஸை சந்திக்க செல்வா சென்றபோது ரஞ்சித்தும் இணைந்து கொண்டார். ‘அந்த மக்கள் எவ்ளோ கஷ்டப்படுத்தறாங்கப்பா!’ என பீடத்தில் இருந்த ஓபிஎஸ்ஸும் வருத்தம் தெரிவித்தார். ஓபிஎஸ்ஸிடம் பேசியும் பலனில்லை. பொதுப் பணித்துறை தலைமை அதிகாரி ‘ஒன்றும் செய்ய முடியாது’ எனக் கைவிரித்தார்.

கனகராஜ் கம்யூனிஸ்ட்

செல்வாவும் பிற கம்யூனிஸ்ட் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுகளை முடக்கிவிட்டு, வெளியேற்றம் மீண்டும் தொடர்ந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி மொத்தமும் களத்துக்கு இறங்கியது. மக்களின் கோரிக்கையான ‘பெரும்பாக்கம் வேண்டாம். நகருக்குள்ளேயே  வசிப்பிடம் வேண்டும்’ என்கிற கோஷத்தை முன் வைத்து  போராட்டங்களும் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. பிறகு தேர்தல், ஆட்சி மாற்றம், கே.பி.பார்க் பிரச்சினை. பிறகு மீண்டும் செல்வா, கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சி.

இரு வருடங்களுக்குப் பிறகு இதோ இன்று, தீவுத்திடல் மக்களுக்கு சென்னை நகரின் புளியந்தோப்பில் அவர்களின் விருப்பப்படி கே.பி.பார்க் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வெற்றிக்கான களிப்பாக இப்பதிவை எழுதவில்லை. கம்யூனிஸ்டுகளின் தொடர் கள இயக்கம் எப்படி உருவாகி இயங்கி திசை திருப்பப்பட்டும் தளராமல் தொடர்ந்து மக்களுடன் நின்று உரிமையை வென்று கொடுக்கிறது என்பதற்கான கால நிகழ்வுக் கோர்வை மட்டும்தான். கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்தக் களமும் மற்றொருக் களமே!

-ராஜசங்கீதன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.