“நெஞ்சுக்கு நீதி”, “மாமன்னன்” அடுத்து “சின்னவர்” ? 😳💐💓💯😊
இந்தியில் ஹிட்டான ‘ஆர்ட்டிக்கிள்-15’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’யில் போலீசாக நடித்துள்ளார் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும் சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின். படத்தின் தயாரிப்பாளர் ராகுல், உதயநிதிக்கும், அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் நெருக்கமானவர்.
ராகுலுக்கு ஃபைனான்ஸ் பின்னணி போனிகபூர்..! ஐஸ்வர்யா ராஜேஷ்- சத்யராஜை வைத்து ‘கனா’ என்ற சிறந்த படத்தை எடுத்த அருண்ராஜா காமராஜ் தான் ‘நெஞ்சுக்கு நீதி’யின் டைரக்டர்.
தலைவர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பு எனது படத்துக்கும் அமைந்துவிட்டதால் என்னுடைய இந்த படம் என் நெஞ்சுக்கு நெருக்கமாகிவிட்டது” என்பதை தனது நட்பு வட்டத்தில் பூரிப்புடன் சொல்லி வருகிறார் உதயநிதி.
அடுத்து மாரிசெல்வராஜ் டைரக்ஷ்னில் ‘மாமன்னன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வைகைப்புயல் வடிவேலு வெயிட்டான கேரக்டரிலும் காமெடியிலும் கலக்குவதால் கடந்த 14-ஆம் தேதியிலிருந்து ‘மாமன்னன்’ யூனிட்டுடன் இணைந்திருக்கிறார் புயல்.
‘மாமன்னன்’ என்ற இந்த டைட்டில் ராஜராஜசோழன் பற்றிய கதை. இது ராங் செண்டிமெண்ட்டாக அமையும்’ என கிளப்பிவிட்டார்கள்.
ஆனால் உதயநிதி தரப்போ, “இது முற்றிலும் மாரிசெல்வராஜ் பிராண்ட் கதை” என்கிறது. உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் தலித்துகளின் வலிநிறைந்த வாழ்க்கையை பற்றித்தான் பேசப்போகிறான் என்பதை கல்வெட்டு விளம்பர டிசைனே சொல்கிறது.
2024-ல் பார்லிமெண்ட் தேர்தல் வரவிருப்பதால் கட்சியில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரவிருப்பதால் மாறன் டைரக்ஷனில் ‘சின்னவர்’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியலில் உதயநிதி இறங்குவார்” என்கிறது அறிவாலய வட்டாரம்.
படத்தின் பெயர்களெல்லாம் தானா அமைகிறதா? இல்ல ப்ளான் பண்ணி அமைக்கிறார்களான்னு தெரியல.
ஆனால் அரசியலில் அடுத்தடுத்த முன்னேற்றக் கட்டங்களை நோக்கிக் காய் நகர்த்தும் உதயநிதிக்கு இது தெரியாமலா இருக்கும்?