இந்த பேர் சொன்னா கஞ்சா கிடைக்கும் : போதையில் தள்ளாடும் திருச்சி
இந்த பேர் சொன்னா கஞ்சா கிடைக்கும் : போதையில் தள்ளாடும் திருச்சி
திருச்சி மாநகரின் கொலையும் கொள்ளையும் அதிகரித்து வருகிறது காரணம் என்னவென்று என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது அனைத்திற்கும் மூலக் காரணமாக போதைப் பொருட்களே உள்ளது. குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் பெரும்பான்மையானவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் திருச்சி மாநகர பகுதிகளில் கொலைகள், கொள்ளைகள் அதிகரித்திருப்பதும் அந்தக் குற்றச் சம்பவங்களில் கைதானவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து தகவல் பெற முயற்சிக்கும் பொழுது திருச்சி மாநகர பகுதிகளில் வயது வரம்பின்றி காசு கொடுத்தால் கஞ்சா எளிதாக கிடைப்பது அப்பட்டமாக தெரிய வருகிறது. அரியமங்கலம், ராம்ஜி நகர், ஸ்ரீரங்கம், வீரேஸ்வரம், ஈபி ரோடு, காஜா பேட்டை, பாலக்கரை, வாமடம், உப்பு பாறை, திருவரம்பூர், உறையூர் கடைவீதி உள்ள சத்துணவு அருகில் மற்றும் வயலூர் சாலை உள்ள காலேஜ் அமைந்துள்ள பகுதி போன்ற இடங்களில் அதிக அளவில் கஞ்சா விற்பனை ஆனது ஜோராக நடைபெறுகிறது.. அதற்கு இளைஞர்களை பெருமளவில் பயன்படுத்தப்படுவதும் தெரியவருகிறது.
இவர்களுக்கெல்லாம் ஒரு பகுதி கஞ்சா புதுக்கோட்டைபேருந்து நிலையத்தில் கை மாறுவதாகவும், ஆளைப் பார்த்த உடனே அடையாளம் கண்டுக் கொண்டு ஏஜென்ட் வாங்க வந்த வரை அழைத்துச் செல்வாராம். வாங்கக்கூடிய சரக்கில் கால் பங்கை ஏஜென்ட் கமிஷனாக பெற்றுக் கொள்வாராம்.
இப்படியாக திருச்சிக்கு வரும் ஒரு பகுதி கஞ்சா பெரும் வியாபாரியிடம் இருந்து சிறு வியாபாரிகள் கைக்கு செல்கிறது. ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொருத்தர் கைக்குச் சொல்லுமாம். அங்கு இருந்து அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய கஞ்சா முகவர்களுக்கு ரூபாய் 150 என்ற கணக்கில் கஞ்சா பொட்டலம் தரப்படுகிறது. அதற்கு மேல் அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாமாம். மேலும் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த சமயத்தில் ஒரு பொட்டலம் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு தூள், பீடி என்ற இரண்டு முறைகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை நடைபெறுகிறது தூள்ளாக பெற்றுக் கொள்பவர்கள் ஒருவிதமான சீட்டைப் பயன்படுத்தி கஞ்சாவை உபயோகிக்கின்றனர். அந்த சீட் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணைய தளத்தில் OCB என்ற பெயரில் 50,150,250 ரூபாய்க்களுக்கு விற்கப்படுகிறது. மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் அமைந்துள்ள கடையில் விற்பனை செய்யப்படுகிறது அந்த கடைக்குச் சென்று 50 ரூபாயை டேபிள் மேல் வைத்தால் அவர் சீட்டை கையில் கொடுப்பாராம்.
அதுமட்டுமல்லாது மேலும் ராம்ஜி நகரில் வியாபாரியிடம் இருந்து ஒவ்வொரு ஏரியா வியாபாரியும் கஞ்சா வாங்க மீன் கறி குழம்பு, கறி குழம்பு, வறுவல் கறி, இப்ப கூப்பிடுறேன், ஜாயின்ட், கிசா, பிஷ் பிஷ், பாயிண்ட், ஆகிய சொற்களை பயன்படுத்திய ஏரியா வியாபாரிகளுக்கு விற்பனையானது நடைபெறுகிறது. இந்த ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு வியாபாரிக்கு உரியதாம்.
இந்த இந்நிலையில் சில தினங்களுக்கு முன் திருச்சி பிராட்டியூர் அருகே இனியனூர் செல்லும் சாலையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி இருக்கின்றனர். அவர்களில் இருவரை போலீசில் பிடித்து பொதுமக்கள் ஒப்படைத்து இருக்கின்றனர்.அவர்களுக்கு கஞ்சா புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த சந்திரசேகர் உய்யகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே கஞ்சா விற்பனை ஈடுபட்டிருக்கும் பொழுது ரோந்து சென்ற போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும் இதற்கு முன்பாகவே மாணவர்கள் இளைஞர்கள் கையில் கஞ்சாப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து லோகநாதன் காவல் ஆணையராக பொறுப்பேற்ற சமயத்திலே குழந்தை நல அலுவலர்கள், குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரை அழைத்து குழந்தைகளிடம் போதைப் புழக்கம் அதிகரித்து வருவதற்கு தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்து இருக்கிறார்.
இதை தடுக்க காவல்துறை தனது நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவு செய்து அவர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்க வேண்டும்.