ஐ பேக் வியூகம் : திமுக கூட்டணி கட்சிகளின் ரியாக்சன்

0

ஐ பேக் வியூகம் : திமுக கூட்டணி கட்சிகளின் ரியாக்சன்

ஊரெங்கும் பொதுக்கூட்டம், தெருவைச் சுற்றி சுற்றி பிரச்சார வாகனங்கள் வளம் வர, மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளும் வாணவேடிக்கலும் அதிர, துண்டும், சால்வையும் வீட்டில் நிறைய, முக்கிய பிரமுகர்கள் திரைக்கலைஞர்கள் பிரபலங்கள் என்று அனைவரும் கைகூப்பி நம் வீட்டு வாசலுக்கு வர, இன்னும் 6 மாத காலமே இருக்கிறது. இன்னுமா புரியவில்லை எதைப் பற்றிக் கூற வருகிறேன் என்று‌ “வாக்காளப் பெருமக்களே” என்ற சொல் ஒலிக்கும் காலமான தேர்தல் காலம் பற்றிய திமுக கூட்டணியின் முதல் பார்வை தான் இந்த பதிவு.

https://businesstrichy.com/the-royal-mahal/

தமிழகம் எப்பொழுதுமே தனக்கென்று தனி பாதையை வகுத்துக்கொண்டு பயணிக்கக்கூடிய மாநிலமாக இருக்கிறது. இந்தியா முழுக்க ஒரு திசையை நோக்கி பயணிக்கும் பொழுதும் கூட தமிழகம் தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தது. அதாவது நான் குறிப்பிட விரும்புவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தான். நாடாளுமன்றத் தேர்தல் இப்படி முடிவடைய சட்டமன்ற தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் வர இருக்கிறது.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கின்றன. திட்டங்கள், கொள்கைகள், வாக்குறுதிகள், வலைதள பிரச்சாரங்கள், கட்சிக்கு ஆட்களை சேர்ப்பது, நிர்வாகிகள் மாற்றம், என்று தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. இப்படியான செயல்பாடுகள் நடந்துகொண்டிருக்க எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கப் போகின்றன. எந்த கட்சி விலகப் போகிறது, எந்த கட்சி சேரப்போகிறது. யாருக்கு யாருடைய ஆதரவு. ஆதரவை பெறுவதற்கு போட்டி, எவர்களுடைய ஆதரவே தேவையில்லை, என்று கூட்டணிக்கான மறைமுகமாக அரசியல் தற்போது நடைபெறத் தொடங்கி இருக்கிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC


திமுக பெரியாரின் கொள்கை ஏந்தி, அண்ணாவின் வழியில் வந்து, கலைஞரால் உயர்த்தப்பட்டு, இப்பொழுது ஐபேக்கால் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. கொள்கையை ஏந்திய கட்சி கார்ப்பரேட் ஃபார்முலாவில் இயங்கிக் கொண்டிருப்பது கொள்கை வழிவந்த உடன்பிறப்புகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஐபேக் உடனான ஒப்பந்தத்தை பொதுவெளியில் மு. க.ஸ்டாலினே வெளியிட்டு இருப்பதும், யார் யாருக்கு சிட்டி என்பதையும் ஐபேக் தான் தீர்மானிக்கப் போகிறதோ என்று கட்சியின் முக்கிய உடன் பிறப்புகளும் கலக்கத்தில்இருக்கின்றனர். இப்படியாக 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் அனைத்து செயல்பாடுகளும் ஐபேக் தான் தீர்மானிக்கப் போகிறது போல் தெரிகிறது.

முதலில் அந்த ஐபேக் நிறுவனத்தைப் பற்றி பார்ப்போம். ஐபேக்கின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் மக்கள் நல வல்லுனராக ஐநா சபையில் பணியாற்றியவர். தற்போது இவர் ஐபேக் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார் அந்த நிறுவனத்தின் பணி என்னவென்றால் அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்துவது தான் அதன் பணி என்று செயல்பட்டு வருகிறது .
இப்படியாக பிரசாந்த் கிஷோர் மோடியை மீண்டும் குஜராத்தின் முதல்வராகவும் இந்தியாவின் பிரதமராக்கவும் இவரே வியூகம் வகுத்துக் கொடுத்தவர் ஆவார். மேலும், நிதீஷ் குமார் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கான தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து போன்ற முக்கிய தலைவர்களை முதல்வராக இருக்கிறார் என்று கருதப்படுகிறது.

ஆனால் ஐபேக்கோ வெற்றியாளர்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு வேலை செய்வது போல் செய்து வெற்றி பெற்ற பிறகு வெற்றிக்கு காரணம் நான் தான் என்று மார்தட்டிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சர்ச்சைக்குள்ளான மனிதராகவே இருக்கிறார். எந்த தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ தேர்தல் முடிந்த பிறகு அவர்களுடன் பகையை சம்பாதிப்பதே அவருடைய வழக்கமாகவும் இருக்கிறது.

இப்படியான ஐபேக் நிறுவனத்தையே திமுக 2021 ஆவது ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போது ஐபேக் நிறுவனம் கொடுக்கும் செயற்திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது.

தற்போது திமுகவின் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு கட்சி, இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் மற்றும் இதர சில சிறிய அமைப்புகளும், கட்சிகளும் கூட்டணி வைத்திருக்கின்றன.


திமுக தற்போது கூட்டணியோடு இணைந்தே செயல்பட்டு கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மூன்று ஆண்டுகளாகவே திமுக நடத்தும் முக்கிய போராட்டங்களில் கூட்டணி கட்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து பல்வேறு இயக்கங்களையும் நடத்தி இருக்கின்றன. இப்படியாக தற்போது நடைபெற்ற செப்டம்பர் 28 விவசாய மசோதாவுக்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது என்ற தோற்றம் நிலவினாலும். எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று தேர்தலுக்கான அனைத்து செயல்பாடுகளையும் ஸ்டாலின் பார்ப்பாரா அல்லது ஐபேக் தீர்மானிக்க போகிறதா என்று கூட்டணி கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வாருங்கள் திமுக கூட்டணிக்கு செல்வோம். திமுக கூட்டணியின் பிரதான அரசியல் கட்சியாக இருப்பது காங்கிரஸ். காங்கிரஸ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக விடமிருந்து பத்து தொகுதிகளை பெற்று 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 65 தொகுதிகள் வரை திமுக கூட்டணி இடமிருந்து எதிர்பார்க்கிறது. ஐபெக் இரண்டு விதமான கருத்துக்களை முன்வைக்கிறது. காங்கிரஸுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் இல்லை என்றால் கூட்டணியிலிருந்து காங்கிரசையும் விளக்கவேண்டும். என்று திமுகவிற்கு ஐபேக் ஆலோசனை வழங்கி இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி திமுக தரும் இடங்களைப் பெற்றுக் கொண்டு சுமுகமாக செல்வதற்கே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணப்படுகின்றன. மேலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுகவின் கூட்டணியை விரும்புவதாகவும் அதே சமயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதியை முன்வைத்து 10 தொகுதி யாவது பெற்றுவிட வேண்டுமென்று இருக்கின்றது. அதேசமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளை முன்வைத்து 12 தொகுதி வரை திமுகவிடம் இருந்து பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிறது. திமுக தலைமையோ கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிகளவிலான தொகுதிகள் கொடுக்க யோசித்து வருவதாகவும், கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை காரணம் காட்டி தொகுதிகளை குறைத்துக் கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும்.

அதேசமயத்தில் மு க ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் ஐ பேக் திமுகவிற்கு புதிய திட்டத்தை வகுத்துக் கொடுத்திருப்பதாகவும்.அந்த திட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மிகவும் சொற்ப தொகுதிகள் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சொற்ப தொகுதிகள் கிடைத்தால் கூட்டணியை விட்டு விலகிவிடும் என்றே கூறப்படுகிறது.
அடுத்ததாக திமுக கூட்டணியின் முக்கிய கட்சியாக இருப்பது திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சி ஆகும்.

திருமாவளவனுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. திமுகவோ வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று செயல்பட்டு வருக்கிறது. விசிகவும் கூட்டணியில் தொடர விரும்புவதாகவும்.அதே சமயத்தில் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் பாமகவை திமுக கூட்டணியில் இழுக்க முயற்சித்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால் விசிகவின் தலைவர் திருமாவளவன் மு .க .ஸ்டாலின் தொடர்பு கொண்டு பாமகவை கூட்டணியில் அனுமதிப்பது. நம்முடைய கூட்டணியில் பலவீனத்தை ஏற்படுத்தும் என்று கூறியதாகவும். அதற்கு ஸ்டாலின் பாமகவை சேர்க்கும் எண்ணம் இல்லை என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திமுக அணியில் இணைந்து விடுதலை சிறுத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது அதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மற்றொரு தொகுதியில் பானை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது விசிக. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 6 என்ற வீதத்தில் 12 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் முன்வைத்து குறைந்தது ஆறு தொகுதிகள் வரையாவது பெற்றுவிட வேண்டுமென்று செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

மேலும் திமுகவின் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய மதிமுகவும் அதன் தலைவர் வைகோவும் திமுகவுடன் சுமுகமான போக்கை கடைபிடித்து திமுக தரக்கூடிய சட்டமன்ற தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேர்தல் பணியை மேற்கொள்ள விரும்புவதாகவும் மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்ததாக திமுக கூட்டணியில் நீண்ட காலமாக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் திமுக ஒதுக்கும் என்றும். கொங்கு ஈஸ்வரன் திமுகவிடம் இருந்து ஐந்து தொகுதிகள் வரை முன்வைத்து இரண்டு தொகுதியை கட்டாயம் பெற்றுவிட வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மனிதநேய மக்கள் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் இருந்து ஒரு தொகுதி எதிர்பார்த்து இருந்தது. ஆனால் திமுக மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காதது. கட்சித் தொண்டர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி இருந்தும் மனிதநேய மக்கள் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளித்தது. இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளை திமுக விடமிருந்து பெற்றாக வேண்டும் என்று மமகவின் தொண்டர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

இப்படி அடுத்ததாக இருக்கக் கூடிய சிறிய கட்சிகளான ஐஜேகே மற்றும் தேர்தல் நெருங்கும் காலத்தில் இணையக் கூடிய சிறிய கட்சிகளுக்கு ஒரு தொகுதிகள் அல்லது தொகுதிகள் ஒதுக்கப்படும் போகலாம் என்று திமுக தரப்பு கூறுகிறது.
மேலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன மாதிரியான மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்.

எப்படியாக இருந்தாலும் 180 முதல் 200 தொகுதிகள் வரை திமுக போட்டியிட வேண்டும் என்று ஐபேக் வியூகம் வகுத்து கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான கூட்டணி பற்றிய முதல் தகவலை இப்படியாக வெளிவருவதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. ஆனாலும் பிஜேபியும் அதிமுகவும் கூட்டாக செய்யும் அக்கிரமங்களுக்கு முடிவுகட்ட தற்போது இருக்கக்கூடிய இந்த வலுவான கூட்டணியினால் மட்டுமே முடியும். மேலும் இந்தக் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இப்படியாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளையும் திட்டங்களையும் தற்பொழுது ஐபேக் வகுத்து உள்ளதாகவும். அதில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது அதே சமயத்தில் திமுகவின் நிர்வாகிகள் ஆலோசனைகளை முன் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இப்படியாக ஐபேக் வைக்கக்கூடிய ஆலோசனைகளையும் திமுக நிர்வாகிகள் வந்திருக்கக்கூடிய ஆலோசனைகளையும் ஆலோசித்தே முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற மு .க .ஸ்டாலின் விரும்புவதாக திமுகவின் முக்கிய உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

மேலும் எப்படியாவது மு. க .ஸ்டாலினை முதல்வராகி திமுகவை ஆட்சியில் அமர்த்திடா என்று உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.