5 வருடமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்த மதுரை போலிஸ் !
மதுரை மாநகர் தெப்பக்குளம் காவல் நிலைய எல்கையில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேல அனுப்பானடியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் சதீஸ் இரும்புக்கடை சதீஸ் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால் நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.
மேலும் சதிஸ் கூட்டாளி அனுப்பானடி பகுதியில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனுப்பானடியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மந்திரமூர்த்தியும் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால் நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.
மேற்கண்ட இரண்டு நபர்கள் தலைமறைவாகி இருவரை கைது செய்வதற்காக உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி மதுரை மாநகர் கோவில் சரக உதவி ஆணையர் காமாட்சி மற்றும் தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி ஆகியோரின் தலைமையில் சார்பு ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் பல இடங்களில் தேடி வந்த போது கோயம்புத்தூர் பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
அதன் பேரில் தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று விசாரணை செய்த போது இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று தமிழக கேரள மாநில எல்கையில் உள்ள ஆனைகட்டி பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்து தனிப்படையினர் ஆகை ஆனைகட்டி சென்று விசாரித்த போது இருவரும் அங்கிருந்தும் தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்நிலையில்இருவரும் மதுரை புது ராம்ரோடு கேட்லாக் ரோடு சந்திப்பில் நின்றிருந்த போது தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்த தனிப்படையினரை மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவர்களைபொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
-ஷாகுல்