கட்சிகளை  இணைத்த  மேரேஜ்

- மதுரையான்

0

அதிரடி, சரவெடி கந்து வட்டிப் பார்டியான மதுரை அன்பு(எ) ஜி.என்.அன்புச் செழியன். தமிழ் சினிமாவில் இந்த அன்புவிடம் வட்டிக்குப் பணம் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை என்று சொல்லலாம். அ.தி.மு.கவின் தலைமைப் பீடமான சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் அன்புவிடம் முன்னாள் முதல்வர் மற்றும் அவரது வாரிசுகளின் சில ஆயிரம் ‘சி’க்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அ.தி.மு.க.வில் ஜெ.பேரவையின் மதுரை மாநகர து.செ.வாக இருந்தவர் அன்பு. நடிகரும் டைரக்டருமான சசிக்குமாரின் மச்சினன் அசோக்குமார் தற்கொலையில் தேடப்படும் குற்றவாளியாக அன்புவை அறிவித்தது போலீஸ். அப்படி தேடப்படும் அறிவிப்பு வெளியான போது, மதுரையில் ஜெ.கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில்’தில்’லாக உட்கார்ந்திருந்தார் அன்பு. அப்போது அமைச்சர் களாக இருந்த செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் அரவணைப்பும் ஆசியும் தான் அந்த ‘தில்’லுக்குக் காரணம். அந்த அசோக்குமார் தற்கொலை வழக்கு என்னாச்சுன்னு தமிழக போலீசுக்கும் தெரியாது, அன்புவுக்கும் தெரியாது.

அப்படிப்பட்ட ‘தில்’ கந்துவட்டி ‘கிங்’ அன்புச் செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அக்கா தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.யின் கணவர் சந்திரசேகர் ஐ.பி.எஸ்.சின் அண்ணன் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.சின் மகன் சரணுக்கும் வருகிற  பிப்.21ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஃபைவ் ஸ்டார் திருமண மண்டபமான ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அன்புச் செழியனின் கண்ட்ரோலில் உள்ளது.

இதில் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை சுஷ்மிதா நிர்வகித்து வருகிறார்.  இதே போல் மணமகன் சரண், சன் ஐ.ஏ.எஸ். அகாடமியின் தலைவராக உள்ளார்.  ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். குடும்பத்தார் மற்றும் அன்புச் செழியன் குடும்பத்தார் கடந்த ஜன.28-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.ஆகியோரைச் சந்தித்து தங்கள் இல்லத் திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.   மதுரை அன்புவின் முகத்தில் அளவுகடந்த  முகமலர்ச்சி. போட்டோவைப் பார்த்தாலே தெரியுதே.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!!

காதல் வந்தாலே…

தென்சென்னை தி.மு.க.எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் -சந்திரசேகர் ஐ.பி.எஸ். தம்பதிகளுக்கு சரயு, மிதிலா என்ற இரு மகள்கள்.  இதில் மூத்த மகள் சரயுவை முக்குலத்து சமூகத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அந்த மாப்பிள்ளையும் சரயுவும் இப்போது சென்னையில் தான் வசிக்கிறார்கள். வருகிற மார்ச்.09-ஆம் தேதி இளைய மகள் மிதிலாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை தனது கணவர் சந்திரசேகர், தம்பி தங்கம் தென்னரசு ஆகியோருடன் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் தமிழச்சி தங்கப் பாண்டியன்.

இந்த திருமணத்தின் பின்னணியில் செம ‘ஸ்ட்ராங்’கான ‘லவ்’ மேட்டரும் உள்ளது. அதாவது தமிழச்சியின் மகள் மிதிலாவும் பொள்ளாச்சி மகேந்திரன் (கமல் கட்சியான ம.நீ.ம.வின் துணைத் தலைவராக இருந்து சமீபத்தில் தி.மு.க.வுக்கு ஜம்பானவர்) மகனும் நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு சந்திரசேகர் ஐ.பி.எஸ்.கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலன் வீட்டாரை மிரட்டியும் பார்த்துள்ளனர். ஆனால் மிதிலா தனது காதலில் உறுதியாக இருந்து எதிர்ப்பையும் மிரட்டலையும் சமாளித்து, வெற்றி பெற்று தனது பெற்றோரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

பெரிய இடத்து காதல்னா சும்மாவா?

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.