“தப்புக்குத் துணைபோய் விட்டேன்” – பிராயச்சித்தம் செய்த எம்.பி அப்துல்லா ! அளவில்லா மகிழ்ச்சியில் மாணவிகள் !

1

“தப்புக்குத் துணைபோய் விட்டேன்” மாணவியர்களிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஒப்புதல் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா 17.2.2024ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்ட்டினத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளிக்குச் சென்று, தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குச் சென்றிருந்தார். மேலும் அன்றைய தினம் பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்றது. அடிக்கல் நாட்டும் விழா முடிந்தவுடன் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவை மாணவியர் மத்தியில் உரையாற்றும்படி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.

சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தும் மீனவச் சமூகத்தில் இருந்தும் பெருவாரியான குழந்தைகள் படிக்கும் பள்ளி அது. அதை மனதில் வைத்து “பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் உங்களுக்குச் சமூக விடுதலையை அளிக்கும் என்று அப்துல்லா கூறினார். மேலும், “படித்து நீங்கள் எல்லாம் பெரும்பெரும் பொறுப்புகளுக்கு வரவேண்டும்” என உரையாற்றி அமர்ந்தார்.

ரோஸ்மில்

உரையாற்றி அமர்ந்த அப்துல்லாவிடம் தலைமை ஆசிரியர்,“கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 மாணவியருக்கு உங்கள் கையால் பரிசுகள் வழங்க வேண்டும்” என்று கோரினார். அதனை மிக்க மகிழ்வோடு அப்துல்லா ஏற்றுக்கொண்டார். பரிசு பொருட்களாகச் சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார். பரிசுகளை வழங்கி முடித்துவிட்டு, அப்துல்லா மீண்டும் மைக்கைக் கையில் எடுத்தார்.

4 bismi svs

“சற்று முன்னர் தான் உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத்தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும். அடுப்படியை மறந்து நீங்கள் எல்லாம் பெரியபெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனப் பேசினேன். ஆனால் என் கையாலேயே பரிசு பொருட்களாக உணவு சமைக்கப் பயன்படும் சட்டி, பானைகளை உங்களுக்கு வழங்க வைத்துவிட்டார்கள். அப்போதே நான் இப்படிப்பட்ட பரிசுகளை வழங்க மாட்டேன் என்று மறுத்திருந்தார் மேடை நாகரீகமாக இருக்காது.

அந்தப் பரிசுகளை உங்களுக்கு வழங்கி நானும் அவர்களின் தப்புக்குத் துணையாக இருந்தேன். அதற்குப் பிராயச்சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என அறிவித்தார். 15 மாணவியர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கியதை மாணவியர்கள் பெற்றுக் கொண்டார்கள். அப்துல்லாவின் மனதில் தான் செய்த தப்புக்கு மாற்றாக நன்மை செய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.

MP Abdullah
MP Abdullah
- Advertisement -

- Advertisement -

தந்தை பெரியார் அவர்கள்,“பெண்களின் முன்னேற்றம் ஒன்றுதான் சமூக முன்னேற்றம் ஆகும். பெண்கள் வளர்ச்சி பெறவேண்டும், புதிய சிந்தனைகளைப் பெறவேண்டும் என்றால் கையில் இருக்கும் சமையல் கரண்டியைப் பிடுங்கி, பெண்களைச் சமையல் அறையிலிருந்து வெளியேற்றிக் கல்வியில் சிறக்கச் செய்தால் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பேச்சோடு மட்டுமல்லாமல், செயல்பாட்டு அடிப்படையில் பரிசா சமையல் பாத்திரங்களை வழங்கிய தப்புக்கு மாற்றாக மாணவியருக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கியது பாராட்டுக்குரியதாகும். அப்துல்லா போன்ற பெண்ணியச் சிந்தனையாளர்களின் செயல்பாடுகள் எதிர்காலத்தில் சமூகத்தில் பெண்களை உயர்வு செய்யும் என்பதில் ஐயமில்லை.

– ஆதவன்

5 national kavi
1 Comment
  1. Nedunchezhian T says

    நன்றி. சிறப்பு

Leave A Reply

Your email address will not be published.