தன்முகத்தில் விளம்பரத்தின் நிழல் கூட விழ விரும்பாதவர் – திருச்சி சாரதாஸ் நிறுவனர் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து !

1

திருச்சி

மலைக்கோட்டை அடிவாரத்தில்

ஒரு துணிக்கோட்டை

கட்டியெழுப்பிய

சாரதாஸ் மணவாளன்

மறைந்தார் என்ற செய்தியில்

கலங்கி நிற்கிறேன்.

என்மீது பெருமதிப்பும்

பேரன்பும் கொண்ட

பெருமகன் அவர்

திருமுறைகளின் 

தீராத காதலர்

அள்ளிக் கொடுக்கும்

அறப்பணி வள்ளல்

தன்முகத்தில் 

விளம்பரத்தின் நிழல்கூட

விழ விரும்பாதவர்

திருச்சிக்கு

ஒரு தேசிய அடையாளத்தை

உண்டாக்கித் தந்த உத்தமர்

எனக்குப் பொருளியல்

கற்றுக் கொடுத்தவர்

அவர் மறைவில்

திருச்சி மட்டுமல்ல

என் நட்பின் 

பெருவெளியில்

ஒரு சிறுவெளியும்

வெற்றிடமாகிவிட்டது

அவர்

ஆருயிர் அமைதியுறுக;

வந்த பணி முடிந்து

வாழ்வு நிறைவுறுக

அவர் பிள்ளைகளால்

தந்தையின் புகழுக்குப்

பெருமை சேர்க

ஆழ்ந்த இரங்கல்

– வைரமுத்து

1 Comment
  1. nangman.com.au says

    This page truly has all the information I wanted
    about this subject and didn’t know who to ask.

Leave A Reply

Your email address will not be published.