முதன் முதலாக பைபிளை தமிழில் அச்சடித்து வெளியிட்ட சீகன்பால்க் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொதுமக்கள்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

முதன் முதலாக பைபிளை தமிழில் அச்சடித்து வெளியிட்ட

சீகன்பால்க் சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய பொதுமக்கள்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

முதன் முதலாக பைபிளை (புதிய ஏற்பாடு) தமிழ் மொழியில் அச்சடித்து நூலாக வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகர் சீகன்பால்க் ( Ziegenbalg) தரங்கம்பாடிக்கு வந்திறங்கிய 317வது நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள அவரது திருவுருச் சிலைக்கு சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக டென்மார்க் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சீகன்பால்க் ‘சோபியா ஹெட்பிக்’ என்ற கப்பலில் 222 நாட்கள் பயணம் செய்து கடந்த 1706-ம் ஆண்டு ஜுலை 9-ம் தேதி தரங்கம்பாடி வந்தடைந்தார்.

3

ஆனால், தான் வந்த நோக்கத்தையும் தாண்டி இந்தியாவுக்கும் தமிழ் மொழிக்கும் பெரும் தொண்டாற்றினார்.

4

வெளிநாட்டினர் அவ்வளவு எளிதில் கற்றுக்கொள்ள இயலாத தமிழ் மொழியை மிகுந்த ஆர்வத்துடன் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்ட சீகன் பால்க், சரளமாகத் தமிழில் பேசவும் செய்தார்.

அதோடு, கடந்த 1715-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டு வந்து, தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டறையில் அச்சுக் கூடம் அமைத்தார்.

இதன் மூலம் இந்தியாவில் முதன் முதலாக தமிழ் மொழியில் பைபிளை (புதிய ஏற்பாடு) காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார்.


பின்னர், தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார்.

தமிழமை முறையாகக் கற்றுக் கொண்ட சீகன்பால்க், தனது சீடர்கள் இருவருக்கும் தமிழை முறையாகக் கற்றுக் கொடுத்தார்.

அவ்விருவரையும் ஜெர்மனி நாட்டிற்கு அனுப்பி அங்கே ஹால்வே என்ற இடத்திலுள்ள ‘கிங் மார்ட்டின் லூதர்’ பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவச் செய்தார்.

தமிழர்களுக்கு கல்விக் கூடங்கள் அமைத்து, பெண்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க 300 ஆண்டுகளுக்கு முன்பே விதவைகளை ஆசிரியர்களாக்கி, பெண்கள் படிக்கும் பள்ளிகளை அமைத்து சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டார்.

இந்தியாவில் பெண்களுக்கென தனியாக முதல் பள்ளிக்கூடத்தை அமைத்ததுடன், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து மக்களைப் போராடத் தூண்டினார் சீகன்பால்க்.
‘தமிழ் மொழியே என் தாய் மொழியாகிவிட்டது’ என பெருமையாக தன் கருத்தைப் பதிவு செய்தார் சீகன்பால்க்.

ஆசியாவிலேயே முதல் தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-ல் அமைத்த சீகன்பால்க் 1719-ம் ஆண்டு தனது 37வது வயதில் காலமானார்.

அவரது உடல் அத் தேவாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


சீகன்பால்க் தரங்கம்பாடி கடற்கரையில் வந்திறங்கிய நாள் ஆண்டுதோறும் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தரங்கம்பாடிக்கு சீகன்பால்க் வந்திறங்கிய 317வது நினைவு தினத்தையொட்டி இன்று புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி, மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தரங்கம்பாடி பேராயர் ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் கலந்து கொண்டு சீகன்பால்க் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தரங்கம்பாடி புது எருசலேம் ஆலயம் சபைகுரு சாம்சன் மோசஸ், தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன், கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமன், சபை குருமார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.