வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி தேனி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு

0

வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி தேனி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு

தேனி மாவட்டம், சங்ககோணப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் பல கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இதில் ஏபிஏ புளூமெட்டல்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் கல்குவாரியில் அரசு அனுமதித்துள்ள அளவுகளையும் தாண்டி கீழே ஆழமாக தோண்டி வெடி வைத்து கல் எடுத்து வருகின்றனர்.

4 bismi svs

கற்களை வெட்டி எடுக்க வெடி வைப்பதால் வெடி வெடிக்கும் போது சுற்றியுள்ள இடங்களில் நில அதிர்வு ஏற்படுகிறது. குவாரியின் அருகில் சங்ககோணம்பட்டி ஊர் அமைந்துள்ளதால் ஊரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் நில அதிர்வினால் சேதமடைகின்றன. மேலும் குவாரியின் அருகில் வைகை ஆற்றில் அமைந்துள்ள அனணக்கட்டில் விரிசல் ஏற்பட்டு அணை கட்டு சேதமடைய வாய்ப்புள்ளது.

மேலும் அணைக்கட்டு சேதமடைந்தால் அதனை நம்பியுள்ள சுமார் 2000 ஏக்கர் விவசாயம் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே வெடி வெடிக்கும் போது வெடி பொருட்களில் உள்ள ரசாயணங்கள் காற்றில் கலந்து காற்று மாசடைகிறது. காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு நூரையீரல் , சுவாச சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

- Advertisement -

மேலும் ஊரைச் சுற்றி உள்ள விவசாயிகள், விவசாயத்தை நம்பி அதிமாக விவசாயம் செய்கின்றனர். ஆழமான கல்குவாரிகளினால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயத்திற்க்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடுகிறது. வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவர் முரளி தரனிடம், இந்து முன்னணியினர் மனு அளிக்கப்பட்டது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.