திருச்சி கிழக்கு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தார் சாலை அமைக்க கோரிக்கை
திருச்சி கிழக்கு மாவட்டம் 18 வது வார்டு பூக்கொல்லை கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தார் சாலை போட்டுத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி கிழக்கு மாவட்ட மமக தலைவர் M .A .முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், கிளை தலைவர் A.பாரூக் பாஷா, அவர்களின் தலைமையில் , மாவட்டத் துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா அவர்களின் முன்னிலையில் பொதுமக்கள் நலன் கருதி 18 வது வார்டு பூக்கொல்லை பகுதிக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி கிழக்கு மாவட்டம் 18 வது வார்டு பூக்கொல்லை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தார் சாலை அமைக்காமல், பூக்கொல்லை தெருவில் மிக மோசமாக நிலையில் சாலை உள்ளதால், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயமும், பள்ளி மாணவ மாணவிகள் முதியவர்கள் நடக்க முடியாத சூழ்நிலையும் உள்ளதால்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மிக விரைவாக தார் சாலை போட்டு தருமாறு, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் S.இனிகோ இருதயராஜ் அவர்களுக்கும், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாகவும், வீடியோ பதிவிட்டு வலியுறுத்துகிறோம். இதில் கிளை நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.