அய்யர் மலையில் ஆமை வேகத்தில் ரோப்கார்

-கே.எம்.என்

0

 

அய்யர் மலையில் ஆமை வேகத்தில் ரோப்கார்

2 dhanalakshmi joseph

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை. பஞ்சபாண்டவர்கள் இம்மலையில் தங்கியதால் ஐவர் மலை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் அய்யர்மலையாக மாறியது. இதனை மீண்டும் ஐவர் மலை என அழைக்க வரலாற்று ஆய்வாளர்கள் ஒருபுறம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இம்மலைக்கு வைர மூர்த்தி மலை, மாணிக்க மலை, காகம் பரவாமலை, வாட்போக்கி நாதர் மலை  என பல்வேறு புனைப் பெயர்களும் உண்டு.

இக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமாகும். இக்கோவிலில் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

- Advertisement -

- Advertisement -

இக்கோயிலில் லிங்கத்திற்கு பூஜிக்கப்படும் பால் தயிராக மாறும் அதிசயமும் உண்டு. இக்கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆன வைகாசி தேர் திருவிழா கார்த்திகை மாத சோம வார விழாக்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இக்கோவிலை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளனர். அய்யர்மலையில் உள்ள இக்கோவில் மலை உச்சியில் 1017 படிக்கட்டுகளில் ஏறி கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. விழாக்களின் போது பக்தர்கள் 1017 படிக்கட்டுகளை கடந்து சென்று சுவாமியை தரிசிப்பது அனைவராலும் இயலாத காரியமாக இருந்து வந்தது.

4 bismi svs

இதனால், பழனி முருகன் கோவில் இருப்பது போல் ரோப்கார் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1996-ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கத்திடம் ரோப்கார் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து  ரோப் கார் கமிட்டி அமைக்கப்பட்டு,  அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியிடம் ரோப் கார் அமைப்பதற்கான அனுமதியை பெற்றார்.  அரசு மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் சுமார் நான்கு கோடி ரூபாய் ரோப்கார் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அப்போதைய இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த  பெரிய கருப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட இரண்டே மாதத்தில், அதாவது 2011ல் சட்டமன்ற தேர்தல் வந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் பல்வேறு தரப்பிலிருந்தும் ரோப்கார் பணியை தொடங்க கோரிக்கை எழுந்ததால் அப்போதைய எம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம்,  ரோப் காருக்கு பதிலாக மினி பேருந்து செல்ல பாதை அமைக்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என் அறிந்து மீண்டும் ரோப்கார் பணி அமைப்பதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது. இதற்கென 2015ஆம் ஆண்டு ரூ.6.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் 2018ம்  ஆண்டிற்குள் பணி முடிக்க முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் பணியில் தொய்வு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிப்பதற்கு  2 மணி  நேரத்திற்கு முன்னதாக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அய்யர்மலை ரோப்கார் சோதனை ஓட்டத்தை சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி அய்யர்மலைக்கு வந்து சோதனை ஓட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். என்றாலும் ரோப்கார் செயல்பாட்டுக்கு வரவில்லை. பணிகள் நிறைவு பெறாமலேயே  தேர்தலுக்காக சோதனை ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என பின்னரே தெரியவந்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த 2021 ஜூன் மாதம் 16ஆம் தேதி, ரோப்கார் பணி குறித்து மலை உச்சிக்குச் சென்று மேல்தளம் மற்றும் கீழ்தளம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை பணிகள் குறித்த  அறிக்கையை அரசுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்,  ”இன்னும் ஆறு மாதத்தில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு முதலமைச்சரின் திருக்கரங்களால் திறக்கப்படும்” என்றார்.  ஆனால், 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பணிகள் முடிவடையாமல் இருப்பது பக்தர்களை கவலையடையச் செய்துள்ளது. வருகிற வைகாசி தேர் திருவிழாவிற்கு முன்னதாகவாவது, பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.