முரட்டு மூட முட்டாள்… யார் தெரியுமா?

0

முரட்டு மூட முட்டாள்… யார் தெரியுமா?

பொது விநியாகத் திட்டத்தில் வழங்கப்படும் பாமா யிலின் ஒரு லிட்டர் 910 கிராம் எடை மட்டுமே வரும். இன்று நியாய விலைக் கடை ஒன்றில் வாங்கப்பட்ட பாமாலின் அதே கடையில் உள்ள தராசில் எடை பார்த்தபோது 910 கிராம் வந்தது.  தினமலர் மாதிரி பாதி தராசின் புகைப்படத்தை மறைக்காமல் எடுக்கப்பட்ட படத்தைத்தான் இணைப்பில் காண்கிறீர்கள்.  பாமோலின்,  பாம் ஆயில் (Palmolein, Palm Oil) போன்றவற்றிற்கு வித்தியாசம் தெரியாம லேயே கருத்து சொல்ல ஒரு கூட்டமும் உண்டு.

ஒவ்வொரு துறையிலும் பத்து மட்ட அதிகாரிகளைத் தாண்டித்தான் அமைச்சர், முதலமைச்சர் போன்றோர் இருக்கிறார்கள். கொட் டாம்பட்டி பால் பூத்தில் காலையில் சரியான நேரத்துக்கு வண்டி வராதது, எல்லைக்காட்டூர் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் புறவழிச்சாலையிலேயே பேருந்துகள் செல்வது என எல்லாவற்றுக்கும் முதலமைச்சர் நிர்வாகத்தை சரியாகக்  கவனிக்கவில்லை என்பதும் ஆட்சி சரியில் லை என்று சொல்வதையும் ஒரு கும்பல் அன்றாட வேலை யாகவே வைத்துள்ளது.

பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்ட பேருந்து களை அடையாளம் காண்பதில் படிப்பறிவு, கண்பார்வை குறைந்த பெண்களுக்கு இருக்கும் கஷ்டத்தை எளிமையாக்கும் நோக்கில் Pink வண்ணத்தில் பேருந்தின் முன்புறமும், பின்புறமும் பெயின்ட் அடித்து விட்டதை ஏதோ அப்படியொரு குற்றத்தைக் கண்டுபிடித்தாற்போல் சிலர் பரிகசித்து வந்தனர்.

சில பேருந்துகளில் முன்னும் பின்னும் மட்டுமே பிங்க் கலர் அடிக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்துக் கழகத்திற்கு பல நூறு லிட்டர் பெயின்ட் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. கடும் நஷ்டத்தில் இயங்கும் துறைக்கு இது ஒரு சிறு கடுகு போன்ற cost control measure என்றாலும் nothing is insignificant என்ற அடிப்படையில் அதில் தவறேதுமில்லை.

மொத்தத்தில் purpose served. பூமி சூடாகிறது, பனிப்பாறை உருகுகிறது கும்பல் பார்வையிலும் இது ஒரு சிறந்த climate sensitive move என்றுதான் சொல்ல வேண்டும்.  அதை நக்கலடித்த கும்பல்களில் பலர் மெத்த படித்தவர்கள், மென்பொருள் நிபுணர்கள்.

அவர்களுக்கு Graphical User Interface என்றால் தெரியாமலிருக்காது. கணினி தாண்டி இதை எங்கேயும் பயன்படுத்துவதில்லை என்று நினைக்கிறார்களா அல்லது அவர்களுக்கு அறிவே அவ்வளவுதானா என்று ஐயம் வருகிறது.

கழிவறைகளில் கூட ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என்பதற்கு எழுத்துகளுக்குப் பதிலாக படம் வரையபடுவது எந்த மொழி பேசுபவ ராக இருந்தாலும் குழப்பமில்லாமல் புரிந்துகொள்ளத்தான்.  மூன்று இலட்சத்திற்கு கார் வாங்கினாலும் மூன்று கோடிக்கு வாங்கினாலும் சாவி போட்டதும் ஓட்டு நர் முன்னால் தெரியும் குறியீடுகள் அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கும்.  படித்தவர்கள் என்பதற்கு அடையாளம் கொஞ்சமாவது common sense  இருக்க வேண்டும். ஆனால் தேச பக்தியைத் தூக்கிக்கொண்டு வரும் கும்பல்களிடம் எந்த விதமான குறைந்தபட்ச அறிவு, நேர்மை, common sense போன்ற எதுவுமே இருப்பதில்லை.  நம்மிடையே இருக்கும் பலர் அப்படிப்பட்ட முரட்டு மூட முட்டாள்கள் என்பதை இத்தகைய சின்னச்சின்ன நிகழ்வு கள் நமக்குக் காட்டிவிடுகின்றன.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.