ரேஷன் அரிசி கடத்தும் ஆளும்கட்சி பிரமுகர்

0

ரேஷன் அரிசி கடத்தும் ஆளும்கட்சி பிரமுகர்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசியானது ஆந்திர எல்லையோரும் உள்ள சித்தூர், குப்பம், பழவநேரி ஆகிய பகுதிகளுக்கு கடத்தப்பட்டு ஆந்திராவில் உள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது. ஆலை உரிமையாளர்கள் அந்த ரேசன் அரிசியை பாலீஸ் செய்து தரமான அரிசியுடன் கலந்து விற்கின்றனர். தமிழகத்தில் கிலோ ரூ.5 முதல் ரூ.7 என வாங்கி ரூ.40 முதல் ரூ.50 விலையில் விற்கின்றனர். இதனால் தரமான அரிசியை விளைவிக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை கடத்துவதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்” என கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர எல்லையில் நடைபெறும் கடத்தல் கர்நாடக எல்லையிலும் அரங்கேறுகிறது.

விரைவில் கர்நாடக மாநில முதல்வரே, இது குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவார். அந்த அளவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பெங்களுருக்கு கனஜோராக அரிசி கடத்தப்படுகிறது. ‘ஆளுங்கட்சி பிரமுகரே’ இந்த கடத்தலை செய்கிறார் என புகார் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக துணை அமைப்பாளரான என்.அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

4 bismi svs

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 43 நெல் அறவை ஆலைகள் உள்ளன. பொதுவிநியோகத் திட்டத்திற்காக ஒவ்வொரு அரிசி ஆலைகளுக்கும் 500 முதல் 1000 டன் வரை நெல் அரவைக்கு வழங்கப்படுகிறது. இதில் முதல் தரமான அரிசியை பெங்களுருக்கு கொண்டு சென்று ரூ.40 முதல் ரூ.60 வரை விலை வைத்து விற்றுவிடுகின்றனர். ஒரு டன் நெல்லுக்கு அரவை முகவர்களிடம் ரூ.100 வீதம் மாதம் ரூ.50 லட்சத்திற்கு மேல் பணம் வசூல் செய்து வருகிறார்.

- Advertisement -

- Advertisement -

பெங்களுருக்கு அரிசி கடத்துவது கிருஷ்ணகிரி மா.செ.வான செங்குட்டுவனின் 3வது மனைவி பார்வதி எனக் கூறப்பட்டுள்ள அந்த புகார் மனுவில்,
“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓசூர் அருகே பிடிக்கப்பட்ட இரண்டு அரிசி கடத்தல் லாரிகளை விடுவிக்கச் சொல்லி சூளகிரி போலீசில் கிருஷ்ணகிரி மா.செ. செங்குட்டுவனே நேரடியாக பேசி, கணிசமான தொகையை கொடுத்து லாரியை விடுவிக்கச் சொல்லியுள்ளார். அரிசி கடத்தியதாக உள்ள புகாரில் செங்குட்டுவனின் 3வது மனைவி பார்வதி பெயர் உள்ளது என்பது தான் இதில் உள்ள விவகாரம்” என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த பார்வதி தான் நெல் அரவை சங்க மாவட்டத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை மக்கள் பட்டினி இல்லாமல் வாழ சீரிய திட்டமாக இலவச அரிசி வழங்குகிறது அரசு. ஆனால் அந்த இலவச அரிசியில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. மீதி 50 சதவீதம் சந்தை யில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான இலவச அரிசி திட்டத்தை எந்தவித தவறும் நேராமல் மக்களுக்கு நேரடியாக சென்று சேர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

புகார் அளித்த அஸ்லத்திடம் நாம் கேட்ட போது, “நான் தான் கம்ப்ளெண்ட் பண்ணினேன். அதுவும் தேர்தல் ஆணையர் மேல் தான் புகார் அளித்தேன். மா.செ. மீது புகார் அனுப்பவில்லை. என் பெயரில் வேறு யாராவது அனுப்பியிருப்பார்கள்” என்று முடித்துக் கொண்டார். புகார் குறித்து மா.செ. செங்குட்டுவனிடம் பேசிய போது, “திமுகவிற்கு என்று அடிப்படை கொள்கை இருக் கிறது. புதிதாக வருகிறவர்களுக்கு கட்சியைப் பற்றித் தெரியாது. இத்தனை வருடம் அந்த பையன் என்னுடன் தான் இருந்தான். ஒழுக்கமான பையன் என்று தான் நான் அருகில் வைத்திருந்தேன். ஆனால இவ்வளவு மோச மான ஆள் என்பது எனக்குத் தெரியாது. எப்படியாவது பதவி பெற வேண்டும் என்று சேற்றை வாரி இறைக்கிறார்கள்” என்றார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.