தற்போது குடியாட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது : சீமான்

0

தற்போது குடியாட்சியில்
கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது : சீமான்

செங்கோல் கொடுத்தது ஒரு ஏமாற்று வேலை என்றும், தற்போது குடியாட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

2 dhanalakshmi joseph

தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் 65 அடி உயர கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடியை ஏற்றி வைத்தார் சீமான். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோல் கொடுத்தது என்பது ஒரு ஏமாற்று வேலை என்றார்.


ஏற்கெனவே முன்னாள் பிரதமர் நேருவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் தமிழர்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. தமிழர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து இதுபோன்று இவர்கள் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு என போலியாக பேசுகிறார்கள் என்றார் சீமான்.

- Advertisement -

- Advertisement -

செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டடிய ராஜராஜ சோழன் சிலையை கோவிலின் உள்ளே வைக்காமல் ஏன் வெளியே வைத்துள்ளார்கள் என்றார்.

4 bismi svs

ராஜராஜ சோழன் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினான். ஆனால் தற்போது குடியாட்சியில் முடியாட்சி நடக்கிறது. அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது என்ற சீமான், செங்கோல் கொடுக்கும்போது ஆதீனங்கள் தேவாரம் பாடுகையில், பெரிய கோவிலில் மட்டும் ஏன் தேவாரம் பாடுவதில்லை?. தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒரு வேளையாவது பாடச் சொல்லுங்கள் என்றார் சீமான்.

தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் இறந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சாமானிய மக்கள் டாஸ்மாக் மதுபானம் குடிக்க முடியாததால் தான் குறைந்த விலைக்கு கிடைக்கக் கூடிய கள்ளை தேடிச் செல்கின்றனர் என்றார் சீமான்.

பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அனைத்து அண்டை மாநிலங்களிலும் கள் விற்கப்படும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கடை திறக்கக் கூடாது என்றார் சீமான்.

வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களிடம் முன்கூட்டியே பாதுகாப்பு கேட்கவில்லை என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்தவொரு சோதனைக்கு செல்லும்போதும் வருமான வரித்துறையினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு செல்ல மாட்டார்கள். திடீரென்று தான் வருவார்கள் இதுகூட தெரியாத அவர் என்ன ஐபிஎஸ்? என்றார் சீமான்.

செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால், வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் எனக் கூறவேண்டியதுதானே? என்றார் சீமான்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றபோது இதுபோல அவரது ரசிகர்கள் முற்றுகை செய்திருந்தால் எப்படி சோதனை செய்திருக்க முடியும்?
இதேபோல எத்தனையோ அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. அனைவரும் பண பலம் படைத்தவர்கள். ஆனால் இதுபோல் யாரும் செய்தது கிடையாது என சுட்டிக்காட்டிய சீமான், “அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறது. பேய்க்கும் பேய்க்கும் சண்டைபோல நாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்,” என்றார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.