முடிவுக்கு வந்த அக்கா டெய்சி – தம்பி சூர்யா பிரச்சனை ! அடுத்து அண்ணாமலை?

0

முடிவுக்கு வந்த அக்கா டெய்சி – தம்பி சூர்யா பிரச்சனை ! அடுத்து அண்ணாமலை?

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் பாஜக சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓபிசி அணி மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா அவர்களுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் வலம் வந்தது.

சூர்யா – டெய்சி சரண்

- Advertisement -

அச்சில் வெளிப்படுத்தமுடியாத அவைக்குதவாத (Unparliamentary words) வார்த்தைகளைப் பேசிச் சூர்யா தன் வீரத்தையும் ரௌடித்தனத்தையும் வெளிப்படுத்தினார். இந்தத் தொலைபேசி உரையாடலை வெளியிட்ட பாஜகவின் கலை, பண்பாட்டு பிரிவு செயலாளர் காயத்திரி ரகுராம் அவர்களை அண்ணாமலை, ‘கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயலைச் செய்துள்ளார்’ என்று கட்சியிலிருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். உத்தரவை ஏற்க மறுத்த காயத்திரி,“நான் உண்மையாக நடந்துகொண்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். நான் பாஜகவில் ஒரு தொண்டராக என்னைப் பணியைத் தொடர்வேன்.

காயத்ரி
காயத்ரி

அண்ணாமலை பாஜகவில் உள்ள பிராமணர்களை ஓரம் கட்டும் செயல்களைச் செய்துவருகிறார். திமுகவிலிருந்து வந்த சூர்யாவுக்கு உடனே மாநிலப் பொறுப்பை வழங்குகிறார். அவருக்கு ஆதரவாகவே அண்ணாமலை செயல்படுகின்றார். டெய்சி சரணைப் பெண் என்றும் பார்க்காமல் கெட்டவார்த்தைகளால் பேசிய சூர்யா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் அண்ணாமலை என்பதற்காகக் காத்திருக்கிறேன்” என்று செமசூடாக செய்தியாளர்களிடம் பேசினார்.

பாஜக சூர்யா
பாஜக சூர்யா

டெய்சி சரண் அவர்களிடம் தொலைபேசியில் வரம்புமீறிப் பேசிய சூர்யா மீது திருப்பூர் பாஜக அலுவலகத்தில் விசாரணை24.11.2022ஆம் நாள் காலை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சூர்யா மற்றும் டெய்சி சரண் ஆகியோர் கலந்துகொண்டனர். விசாரணை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இது உட்கட்சி விவகாரம் என்பதால் செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. விசாரணை முடிந்து வெளியே வந்த சூர்யா மற்றும் டெய்சி சரண் ஆகியோர் இணைந்து பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

பாஜக சூர்யா
பாஜக சூர்யா

செய்தியாளர்களிடம் பேசிய டெய்சி சரண்,‘சூர்யாவை என்றும் தம்பியாகவே எண்ணி மதிக்கிறேன். தொலைபேசி உரையாடல் தொடர்பாகச் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாகக் கடிதம் கொடுத்துள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து பாஜகவில் தொடர்ந்து செயல்படுவோம்’ என்றார். தொடர்ந்து பேசிய சூர்யா,‘அக்கா டெய்சியோடு பேசிய தொலைபேசி உரையாடலைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்காவே கூறிவிட்டார்கள். இனி நான் அக்கா டெய்சியோடு இணைந்து செயல்படுவேன். யார் கண்பட்டது என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சனை இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாற்றிவிட்டார்கள்’ என்று கூறினார். இதனால் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்று அனைவரும் எண்ணியிருந்தனர்.

4 bismi svs
டெய்சி சரண்
டெய்சி சரண்

24.11.2022 இரவு 8.30மணியளவில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட தலைவர் அண்ணாமலையின் அறிக்கையில்,‘தொலைபேசி உரையாடலில் டெய்சி அவர்களிடம் முறைதவறிப் பேசியதைச் சூர்யா ஒத்துக்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில், ஓபிசி பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா 6 மாதக் காலத்திற்குக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். பாஜகவின் அடிப்படைத் தொண்டராகப் பாஜகவின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதில் எந்தத் தடையும் இல்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

6 மாதக் காலத்திற்குச் சூர்யாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தால் அவர்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுவார்’ என்று ஈயம் பூசுன மாதிரியும், ஈயம் பூசாதது மாதிரியும் செய்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காயத்ரி
காயத்ரி

சூர்யா – டெய்சி தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்து காயத்திரியிடம் கொடுத்தது டெய்சிதான். அதை வெளியிட்டது காயத்திரி. முறையற்ற வகையில் பேசிய சூர்யாவுக்கு மயிலிறகால் அடித்து அண்ணாமலை தண்டனை வழங்கியுள்ளார். உரையாடலை ஒலிப்பதிவு செய்த டெய்சிக்கு எந்தத் தண்டணையும் இல்லை. சூர்யா ஒத்துக்கொண்ட உரையாடல் ஒலிப்பதிவை வெளியிட்ட காயத்திரி மட்டும் ஏன் கடும் தண்டனைக்கு உட்படுத்தி அண்ணாமலை ஏன் நடவடிக்கை எடுத்தார் என்ற கேள்விக்குப் பாஜக தரப்பிலிருந்து விடை கொடுத்துள்ளனர்.

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழ்நாடு பாஜகவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அணி, அண்ணாமலை அணி என்ற இரு அணிகள் உள்ளன. காயத்திரி உள்ளிட்ட பல பிராமணர்கள் எல்.முருகன் அணியில் உள்ளனர். அண்ணாமலை அணியில் பிராமணர் அல்லாதார் உள்ளனர். எல்.முருகன் – அண்ணாமலை இடையே நடந்துகொண்டிருக்கும் மோதலின் விளைவுதான் காயத்திரி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். சூர்யா போல 6 மாதம் கழித்துச் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அண்ணாமலை – எல்.முருகன்
அண்ணாமலை –
எல்.முருகன்

எல்.முருகன் முயற்சியில் விரைவில் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அண்ணாமலையே சில நாள்களுக்கு முன்பு இந்தக் கருத்தைக் கூறியுள்ளார் என்பதை முக்கியமாகப் பார்க்கவேண்டும் என்று பாஜக தரப்பில் உட்கட்சி பிரச்சனையின் போக்கு குறித்து நமக்குத் தெரிவிக்கப்பட்டது. சூர்யா – டெய்சி பிரச்சனை முடித்து வைக்கப்பட்டாலும் அண்ணாமலைக்குப் பிரச்சனை தொடங்கிவிட்டது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாமலையின் எதிர்காலம் என்ன என்பது விரைவில் தெரியவரும் என்று நம்பலாம்.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.