‘குஷ்பு – கனிமொழி குறட்டை… ஸ்டாலின் மவுனம் – சூர்யாவை காப்பாற்றுவது யார்?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘குஷ்பு – கனிமொழி குறட்டை… ஸ்டாலின் மவுனம் – சூர்யாவை காப்பாற்றுவது யார்?

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

பாஜகவின் ஓ.பி.சி. அணிப் பிரிவின் மாநில தலைவரும் தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பியுமான சிவாவின் மகனுமாகிய சூர்யா ,பாஜக சிறுபான்மையினர் அணியின் தலைவர் டெய்சி சரணிடம் பேசிய ஆடியோ விவகாரத்தின் சூடு இன்னும் அடங்கவே இல்லை.பாஜகவின் உள்கட்சி விவகாரம் என்றாலும் சூர்யா பெண்ணை இழிவாக பேசியதில் கனிமொழியும் குஷ்புவும் குறட்டை விட்டாலும் மற்றொரு பக்கம் சாதி மதக் கலவரத்தை தூண்டும் விதமான அமைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சூர்யா - டெய்சி சரண்
சூர்யா – டெய்சி சரண்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இது குறித்து பேசிய ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் ”

பாஜகவின் உள்கட்சி விவகாரத்தில் டெய்சி சரணுக்கும் – சூர்யாவிற்கும் இடையே நடந்த உச்ச கட்ட மோதலின் ஒரு பகுதிதான் இந்த ஆடியோ விவகாரம். பாஜகவின் மேல் மட்டத்தில் இது போல சம்பவங்கள் தினசரி நடக்கிறது. சூர்யா – டெய்சி உரையாடல் வெளியே வந்துள்ளது. வெளியே வராமல் இன்னும் ஏராளம் உள்ளது. சூர்யா என்றாலே சர்ச்சைக்குரிய நபர்தான். அவர் எப்படிப்பட்டவர் என்பது ஒட்டு மொத்த திருச்சிக்கே தெரியும். அவரால் மிகப்பெரிய சாதி சண்டை கடந்த 2009 ல் திருச்சியில் நடக்க இருந்தது. உளவுத்துறை போலீசார் மிக சாதுர்யமாக தடுத்து விட்டனர்.

திருச்சி சத்திரம் பகுதி
திருச்சி சத்திரம் பகுதி

திருச்சி சத்திரம் பகுதியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரதாப் என்கிற இளைஞரை போதையில் சூர்யா சாதியை சொல்லி தாக்கி விட்டு சென்றுள்ளார். பிறகு சூர்யாவை தூக்கி வந்து திருச்சி சத்திரம் பேரூந்து நிலையத்தில் வைத்து பிரதாப் மற்றும் அவருடைய நண்பருமான விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் சேர்ந்து சூர்யாவை பொளந்து விட்டனர். கோட்டை ஸ்டேசனில் போலீசார் பிரதாப் ,விஜய் ஆனந்த் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்யச் சொல்லி அப்போது திருச்சி ரூரல் எஸ்.பி. கலிய மூர்த்தி பிரஷர் போட்டார்.

கோட்டை காவல் நிலையம்
கோட்டை காவல் நிலையம்
பாஜக சூர்யா
பாஜக சூர்யா

திருச்சி சிவாவே நேரடியாக தலையிட கலிய மூர்த்தியும் சிவாவும் ஒரே சமூகம் என்பதால் கலிய மூர்த்தி பிராதப் மற்றும் விஜய ஆனந்தையும் கோட்டை காவல் நிலையத்தில் ரிமாண்ட் செய்ய தயார் ஆன போது, மறைந்த பசுபதி பாண்டியன் பிரதாப் மற்றும் விஜய ஆனந்திற்கு ஆதரவாக தலையிட இரு சமூகப் பிரச்னையாக மாரும் சூழல் ஆனது. விவகாரம் பெரியதாகும் சூழலில் திருச்சி சிவாவே நேரடியாக பசுபதி பாண்டியனிடம் பேசி சமாதானம் கேட்டார். பிறகு இருவரையும் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டனர். அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் பாரில் குடித்து விட்டு பணம் தராமல் அடித்து நொறுக்கி அங்கும் தனது சாதியை சொல்லி தப்பித்தார் சூர்யா. குறிப்பாக திருச்சி சிவாயின் ஐ.பேடில் இருந்த சசிகலா புஷ்பா மற்றும் சிவா நெருக்கமாக இருந்த காட்சிகளை வெளியிட்டதே சூர்யாதான். அடித்து விபத்தில் பேரூந்தை தூக்கிச் சென்றது.

 

Sp kaliyamoorthy ஓய்வு
Sp kaliyamoorthy ஓய்வு

இப்போது திருச்சியில் சுதந்திர போராட்ட தியாகியின் பேத்தியின் பள்ளியை அபகரிப்பதாக புகார் என கட்சியின் உள்ளும் வெளியிலும், சொந்த வீட்டிலும் இப்படி நூறுக்கும் மேற்பட்ட பிரச்னைகள்,புகார்கள் உள்ளன. ஆனால் பெண்ணை தொட்டால் கைகள் இருக்காது என்று பொய்கார அண்ணாமலையால் சூர்யா காப்பாற்றப்பட்டாலும், ஏன் தமிழக அரசு சூர்யா மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று சந்தேகம் எழுந்துள்ளது.சிவாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே சொத்து பிரச்னை ஆகையால் இருவரும் பேசிக்கொள்வது இல்லை ஆகவே சூர்யா பாஜகவிற்கு வந்தார். பாஜகவின் பக்கம் வந்தாலும் இன்னும் அவர் திமுக எம்.பி.கனிமொழிக்கு விசுவாசமாக இருக்கிறார். இரு கட்சிக்கும் இடையே இனைப்பு பாலமாக இருந்து வருகிறார்.

கனிமொழி
கனிமொழி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

குஷ்பு
குஷ்பு

எதிர்காலத்தில் ஏகப்பட்ட திட்டங்களும் உள்ளது. இது வேறு விஷயம். இப்போது அவர் பேசியுள்ளது விவகாரங்களில் பெண்ணிய வாதிகள் என அறியப்படும் குஷ்புவும், திமுக எம்பியுமான கனிமொழியும் இதுவரை டெய்சி சரண் விவகாரங்களில் வாய் திறக்கவே இல்லை. சமீபத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் ஆர்.கே. நகரில் 4 நடிகைகள் குறித்து பேசிய விவகாரத்தில் நடிகை குஷ்பு அவரது ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பு, ‘பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களிடம், அவர்கள் வளர்ந்த விதம் மற்றும் அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலை பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

 ஸ்டாலின்
M.K.ஸ்டாலின்- தமிழக முதல்வர்

இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா?’ என கேள்வி எழுப்பினார். இதே சாதிக் விவகாரத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, ‘பெண்ணாகவும், மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பேசப்பட்ட இடம், அவரது கட்சி எதுவாக இருந்தாலும் இந்த பேச்சை ஏற்க முடியாது. முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் திமுகவால் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது.’ என்றார்.ஆனால் இப்போது சூர்யா பேசியதிற்கு குஷ்பும் ; கனிமொழியும் குறட்டை விடுவது ஏன்? சூர்யா அதே பெண்ணின் கருப்பையை அறுத்து மெரினா பீச்சில் எறிவேன் என்று கடுமையாக எச்சரிக்கை செய்கிறார்.

 டெய்சி சரண்
டெய்சி சரண்- பிஜேபி

இதைக் கேட்டதும் குஷ்புவிற்கு ஏன் இரத்தம் கொதிக்க வில்லை? உச்ச கட்டமாக டெய்சி ஒரு பெண் என்றும் பாராமல் வெட்டி கொலை செய்து விடுவதாக எச்சரிக்கை செய்கிறார். டெய்சிக்கும் – சூர்யாவிற்கும் என்ன பிரச்னையாக இருந்தாக இருந்தாலும் சூர்யா பேசியது உச்சகட்ட வன்முறை. சொந்தக் கட்சிக்காரன் பேசியதிற்கே வாய் திறந்த கனிமொழி சூர்யா இவ்வளவு பேசியும் கப் சிப் என்றால் கனிமொழிக்கும் சூர்யாவிற்கும் இடையே உள்ள உறவு என்ன என்பது கேள்விக் குறியாகிறது.

கனிமொழி
கனிமொழி – திமுக
குஷ்பு
குஷ்பு – பிஜேபி

இறுதியாக சூர்யா ஒன்று சொல்கிறார் எனது சாதிக்காரனை தூண்டிவிட்டால் மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என்கிறார். வெளிப்படையாகவே சாதி மதக் கலவரத்தை தூண்டிவிடுவதாக மிரட்டுகிறார். சைதை சாதிக் பேசியதும் சொந்தக் கட்சிக்காரர் என்கிற பாரபட்சமின்றி அவர் மீது வழக்குப் பாய்ந்தது ஆனால் சூர்யா சாதி மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசுகிறார் முடிந்தால் அண்ணாமலையாவது, அமித்ஷாவது, மோடியாவது கோர்ட்டாவது என ஏக வசனத்தில் பேசுகிறார். ஆனாலும் அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் இல்லை.

திமுக பேச்சாளர் சைதை சாதிக்
திமுக பேச்சாளர் சைதை சாதிக்

ஏற்கனவே திமுகவிற்கும் – பாஜகவிற்கும் இடையே இரகசிய உறவுகள் உள்ளதாக பாஜக எதிர்பாளர்கள் மத்தியில் பெருத்த பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் அதை ஊர்ஜிதம் விதமாக சூர்யா மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லாமல் இருப்பது ஊர்ஜிதம் செய்வது போலவே உள்ளது. பெண்களை தாயாக, சகோதரியாக ,மனைவியாக, குழந்தைகளாக ,மகள்களாக நேசிக்கும் எந்த ஆண்களும் சூர்யாவின் பேச்சுகளை இரசிக்க மாட்டார்கள்.

திமுக- பாஜக
திமுக- பாஜக

பெண்கள் மீது பெரும் மரியாதை வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறார் என்ன செய்ய போகிறார் என்பது தெரியவில்லை ஆனால் சூர்யாக்கள் இந்த சமூகத்தின் சாக்கடை அதை சுத்தம் செய்வது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது ” என்றார்.

– அஜித் குமார்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.