ஸ்ரீரங்கம் சோகம் ! மனசு வலிக்கிறது ! இரண்டு மாணவர்களுக்கு என்னாச்சு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீமான் குருக்குலக் பள்ளி  ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது.  ஸ்ரீரங்கம்  கோவில் ஸ்தலாத்தர்களில் முக்கிய நபரான ஆடிட்டர் பத்திரி பட்டர்  என்பவர் ஸ்ரீமான் குருக்குலம் வேதபாடசாலையில் முக்கிய பொறுப்ப வகிக்கிறார்.  இந்த குருக்குல பள்ளியில்  தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் தங்கி  படிக்கிறார்கள்.  இங்கும் படிக்கும் மாணவர்களுக்கு Pre Primary Montessori Education -EPL, Sensorial, Arithmetic, Language(Tamil, English, Sanskrit) Early Primary Maths, Physics, Chemistry, Biology, History, Geopgraphy and Language(Tamil, English, Sanskrit) ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஸ்ரீமான் குருக்குலம்
ஸ்ரீமான் குருக்குலம்

Sri Kumaran Mini HAll Trichy

இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (14), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று 14.05.2023 காலை 6 மணி அளவில் குளிக்கச் சென்றனர்.

பின்னர் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சுழலில் சிக்கிய அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தடுமாறி தப்பி கரைக்கு ஓடி வந்தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கொள்ளிடம்
கொள்ளிடம்

Flats in Trichy for Sale

பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். உடனடியாக வேத பாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர்.

கொள்ளிடம்
கொள்ளிடம்

அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.

பத்திரி பட்டர்
பத்திரி பட்டர்

தற்போது கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது. இதனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் குளிக்க சென்ற 4 பேரும் நிலைகொள்ள முடியாமல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தேடும் பணிக்காக கொள்ளிடம் ஆற்றில் நீர்திறப்பை குறைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீமான் குருக்குலக் பள்ளி  ஆசிரமத்தில் வேத பாடசாலை படிக்கும் மாணவர்களை சாதாரணமாக வெளியே அனுமதிக்கவே மாட்டார்கள், ஆனால் குளிப்பதற்கு எப்படி பாதுகாப்புக்கு யாரும் இல்லாமல் எப்படி அனுப்பினார் என்பது தான் தற்போது மிகமுக்கியமான கேள்வியாக உள்ளது.  ஆடிட்டர் பத்திரி பட்டர் ஸ்ரீரங்கத்தில் ஸ்தலாத்தார்களில் முக்கியமானவர் அவரை காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறார்கள்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.