மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஊட்டச்சத்து குறித்த சர்வதேச மாநாடு !
மதுரை அமெரிக்கன் கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் உயிரி தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளில் ஊட்டச்சத்து குறித்த சர்வதேச மாநாடு தொடங்கியது இதில் முதுகலை துறை தலைவர் முனைவர் நித்யா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர்டாக்டர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை உரை ஆற்றினார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள அமெரிக்க- பங்களா பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் ருக்ஷணா, சிறப்புறை ஆற்றினார். மும்பை அமித்தி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வில்சன் அருணி முகவுரை ஆற்றினார். 146 ஆராய்ச்சி கட்டுரையை கொண்ட புத்தகத்தைமதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர்டாக்டர் தவமணி கிறிஸ்டோபர் வெளியிட டாக்டர் ருக்ஷணா மற்றும் முனைவர், வில்சன் அருணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
துணை முதல்வர் முனைவர் மார்டின் டேவிட், நிதிகாப்பாளர் முனைவர் பியூலா ரூபி கமலம் கலந்து கொண்டனர். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர், இளங்கலை துறை தலைவர் முனைவர் பிரியதர்ஷினி நன்றியுரை ஆற்றினார்.