தில்லியில் வைகோ பிஜேபியுடன் நெருக்கத்திற்கான காரணம் இது தானோ !  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தில்லியில் வைகோ பிஜேபியுன் நெருக்கத்திற்கான காரணம் இது தானோ !  

 

மதிமுக பொதுச்செயலர் வைகோ நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவையின் உறுப்பினராகப் பொறுப்பேற்பதற்காக ஜூலை மாதம் 22ஆம் நாள் பிற்பகல் 2.00 மணியளவில் தில்லி சென்றார். தில்லி வாழ் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் தில்லி விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று மாலை 4.00 மணிக்கு தமிழக விவசாய சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வைகோ ஜூலை மாதம் 25ஆம் நாள்தான் மாநிலங்களவையின் உறுப்பினராக பொறுப்போற்றுக் கொண்டார். இந்த இடைப்பட்ட 2 நாள்களில் தன் மனைவி, மகன் துரை வையாபுரி மற்றும் பேத்திகளுடன் தில்லியில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். நாடாளுமன்ற வரண்டாவில் எதேச்சையாக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியசாமியைச் சந்தித்தார். பின்னர் பாஜகவில் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களைச் சந்தித்தார். முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்சிங்கவையும் சந்தித்தார். முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானியைச் சந்தித்தார். அவர் இல்லத்தில் வைகோவின் குடும்பத்தினருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது. தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். அமைச்சரின் வேண்டுகோளின்படி அந்த சந்திப்பின் ஒளிப்படங்கள் வெளியிடப்படவில்லை. வைகோ உறுப்பினராகப் பொறுப்பேற்று, ஜவுளித்துறை மானியக் கோரிக்கை மீது வைகோ கன்னிஉரையாற்ற போகிறார் என்பதை அறிந்து அவைக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

22 ஆண்டுகள் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு சலுவை வழங்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு 370ஐ நீக்கும் மசோதா கடந்த ஆகஸ்ட்டு 5ஆம் நாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநில சலுகை இரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தார். மசோதா தாக்கல் செய்யப்படும் நாளின் காலையில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். தில்லியில் முக்கிய தலைவர்களைச் சந்தித்த வைகோ காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி உட்பட யாரையும் சந்திக்கவில்லை. சந்திப்பில் பாஜகவினர் அதிக எண்ணிக்கையில் இருந்தது வைகோவின் தில்லி நகர்வில் மர்மங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

காஷ்மீர் சலுகையை இரத்து செய்யும் மசோதாவிற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகளின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவைத்தலைவர் இருக்கை காங்கிரஸ் கூட்டணி கட்சியினாரால் முற்றுகையிடப்பட்டது. அவைத்தலைவர் எல்லாரையும் கலைந்து அவரவர் இருக்கைக்குச் செல்லக் கேட்டுக் கொண்டார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைத்தலைவரிடம்,“வைகோவின் உரையை நாங்கள்(பிஜேபி) கேட்க விரும்புகிறோம். அவருக்குப் பேச அனுமதி வழங்கக் கேட்டுக் கொண்டார்.

வைகோ உரையாற்றத் தொடங்கும்போது, காஷ்மீர் பிரச்சனையில் என் கருத்தும் காங்கிரஸ் கட்சியின் கருத்தும் ஒன்றுதான் என்றாலும் நான் காங்கிரஸ் அணியிலிருந்து நான் பேசவில்லை என்று தொடங்கி காங்கிரஸ் கட்சி காஷ்மீர் பிரச்சனையைச் சரியாக கையாளவில்லை. காங்கிரஸ் கட்சியை விளாசித் தள்ளினார் வைகோ. கடைசியில் பாஜகவையும் ஒரு பிடிபிடித்தார். இதை அமித்ஷா வைகோவின் பேச்சை உள்ளூர இரசித்தை உணரமுடிந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வைகோவின் ஆங்கில உரையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைச் சினம் கொள்ள வைத்தது என்பது உண்மை.

 

வைகோ ஏன் பாஜகவிடம் ஒருவித சமரத்துடன் செயல்படுகிறார்? காங்கிரஸ் கட்சியை  உதாசீனப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. லாடக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை சீனா கடுமையான குரலில் எதிர்த்துள்ளது இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இலங்கையில் சீனா கடலைத் தூர்த்து ஒரு புதிய நகரத்தை நிர்மணித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் டிசம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியா தங்களின் ஆதரவாளர் அதிபராக வருவதை விரும்பும். சீனா எதிர்ப்பு நிலையில் இந்தியா இப்போது இருக்கிறது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள வைகோ விரும்புகிறார். சீனா ஆதரவு நிலையில் உள்ள இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநாடு  தமிழீழம் அமையும் வாய்ப்பு உள்ளதாக வைகோ எண்ணுகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியோடு உறவு என்பதைவிட பாஜகவோடு சமரசம் என்பது சரியாக இருக்கும் என்பதுதான் வைகோவின் நிலைப்பாடு. கலைஞர் நினைவு நாளில்(07.08.2019) அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முழங்காலிட்டு வணக்கம் செலுத்திய வைகோ, செய்தியாளர் சந்திப்பின்போது, “என் உயிர் இருக்கும் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் அமையவேண்டும் என்ற எண்ணத்திற்கு அண்ணாவே நீங்கள் எனக்கு சக்தியைத் தரவேண்டும் என வேண்டிக்கொண்டேன்” என்று கூறியதைப் மேலேயுள்ள செய்திகளோடு பொருத்திப் பார்த்தால் தில்லியில் வைகோவின் நகர்வுகளுக்கு அர்த்தம் விளங்கிக் கொள்ளமுடியும்.

ஆசைத்தம்பி

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.