விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது”

- ஜோ.சலோ

0

உலகின் சக்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படும் கியூபாவைக் கைப்பற்றிய ஸ்பானிய அரசு, அட்டை போல் கியூபாவின் வளத்தையெல்லாம் உறிஞ்சத் தொடங்கியது.

ஸ்பானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு, அமெரிக்கா உதவி செய்தது. இதனால், ஸ்பானிஷ் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் ஆண்டு ஸ்பானிய அரசு தோற்றது. ஆனால் அமெரிக்காவும், கியூபாவின் பொருளாதாரத்தை உறிஞ்சத் தொடங்கியது. அமெரிக்காவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்ற பிடல்காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டதால், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத்தீயாகப் பரவியது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இறுதியில் பிடல் விடுதலை செய்யப்பட்டார். இந்தநிலையில்தான் பிடல்காஸ்ட்ரோவுடன் தொடர்பு கொண்டிருந்தவர் களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்து வந்தவர்களிடமும் இவர் தொடர்பு வைத்துக் கொண்ட சேகுவேரா கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளத் தொடங்கினார்.  அவரை ‘சே’ என்றே பலரும் அழைத்தனர். ‘சே’ என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருளைக் கொண்ட அர்ஜென்டீனச் சொல்லாகும்.

கியூபாவில் போராளியாக இருந்த, நிக்கோ லோபஸ், சே, கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. இருவரும் இணைந்து, ஏறக்குறைய ஒன்றரை வருடக் கடுமையான போராட்டத்தின் மூலம்  கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகின் அனைத்து நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியது. 1959, பிப்ரவரி 16இல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றார். அப்போது ‘சே’ தேசிய வங்கியின் அதிபராகவும், விவசாயத் துறையில் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது, தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

1966இல் காங்கோவை விட்டு வெளியேறிய ‘சே’, பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். போலி பாஸ்போர்ட்டுடன் வந்ததால், பொலிவிய ராணுவம் அவரை சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. அவர் காலில் குண்டடிபட்ட நிலை யில், தன்னைச் சுற்றித் துப்பாக் கியுடன் சூழ்ந்த பொலிவிய  ராணுவத்திடம். நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட ”சே” அந்த பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த ஆசிரியர் ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் பெண்ணிடம், “இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்குப் படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்” என்றார்.

பிடிபட்ட ‘சே’ சுட்டுக் கொள்ளும் பொறுப்பினை ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் ஏற்றுக்கொள்கிறார். 1967 அக்டோபர் 9-ம் தேதி சரியாக நண்பகல் 1.10 மணியளவில், கைகள் கட்டப்பட்ட நிலையில், தனிமையான இடத்துக்கு மரியோ, சேகுவேராவை அழைத்துச் செல்கிறார். ”சே’ இறந்துவிட்டார் என்ற தகவல், உலகை உலுக்கியது.

“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது” என்பதே அவர் அடிக்கடி சொல்லும் வசனம். ஆம்… ”சே”

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.