அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

2026 சட்டமன்றத் தேர்தல் யாருக்கு வாய்ப்பு….?

திருச்சியில் அடகு நகையை விற்க

இதுவரை வெளிவந்துள்ள தேசிய அளவில் கவனம் பெற்ற கருத்துக்கணிப்பில் திமுக 45% வாக்குகளையும் அதிமுக 35% வாக்குகளைப் பெறும் என்றும் எஞ்சியுள்ள 20% வாக்குகளில் நாம் தமிழர் 8% வாக்குகளைப் பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 12% விழுக்காட்டில் அரசியல் அனுபவம் கொண்ட சசிகலா+இராமதாசு அணி 2% வாக்குகளை பெறும். சுயேட்சைகள் வழக்கமாக 3% வாக்குகளைப் பெறுவர். எஞ்சியுள்ள 7% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 திமுக வெற்றி வாய்ப்பு

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திமுக – அதிமுக இடையே பழைய வாக்கு விழுக்காடு அடிப்படையில் 10% முன்னணியில் உள்ளது. இதன் அடிப்படையில் திமுக 130 இடங்களையும் கூட்டணி கட்சிகள் 50 இடங்களையும் பெற்று திமுக கூட்டணி 180 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 4 முனைப் போட்டியில் 10% வாக்கு வித்தியாசம் என்பது திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் ஆய்வாளர் இரவீந்திரன் துரைசாமி மற்றும் ஜென்ராம் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவுக்குக் கடும்போட்டியை சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சந்தித்து வருகின்றது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

அதிமுக வெற்றி வாய்ப்பு

அதிமுக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக அமையவில்லை என்பது அதிமுகவுக்கு மைனஸ். அதிமுக கூட்டணி மீண்டும் அதிகப்பட்சம் 60-70 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. சில கருத்துக்கணிப்புகள் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணி 126 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வெற்றி பெற்றால் அதிமுக கூட்டணி ஆட்சியை அமைக்கதான் வாய்ப்பு அதிகம். அதிமுக அறுதிப்பெரும்பான்மையைப் பெறும் என்று என்ற கருத்துக்கணிப்பும் தெரிவிக்கவில்லை. அதிமுக மீண்டும் பலமான எதிர்க்கட்சியாக 2026 சட்டமன்றத்தில் அமரும் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணி பக்கம் திரும்பினால் அதிமுகவுக்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

தவெக வெற்றி வாய்ப்பு

தவெக 12% – 15% வாக்குகளைப் பெறும் என்றும் அதிகப்பட்சம் 7 – 10 தொகுதிகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. 1977 முதல் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையேதான் இருமுனை போட்டி தொடர்கின்றது.

விஜய்இது கடந்த கால வரலாறு.

1996ஆம் ஆண்டு தேர்தலில் மதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 3 ஆவது அணியாக போட்டியிட்டது. ஒரு தொகுதியில்கூட வெற்றிப்பெறவில்லை. 5% வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக 4 இடங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

2001 தேர்தலில் 3ஆவது அணியாக மதிமுக தனித்துப்போட்டியிட்டது. ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

2006 தேர்தலில் திமுக – அதிமுகவுக்கு எதிராக 3 ஆவது கட்சியாக தேமுதிக போட்டியிட்டு விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். பெற்ற வாக்கு 11%

2016 தேர்தலில் திமுக – அதிமுகவுக்கு எதிராக மக்கள் நலக் கூட்டணி 3ஆவது அணியாக போட்டியிட்டது. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு டெப்பாசிட் இழந்தார். தனித்துப்போட்டியிட்ட அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. திமுக 90 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது.

2026 தேர்தலில் திமுக – அதிமுகவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகின்றது. தவெக தரப்பில் தங்களிடம் 30% வாக்குகள் உள்ளன என்றும் 10% வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்று பத்திரிக்கையாளர்கள் பெருமாள் மணி, சுவாமிநாதன், சபீர் போன்றவர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

தவெக விஜய் 1977இல் எம்.ஜி.ஆர் ஆட்சி மாற்றம் செய்ததுபோல் ஒரு மாற்றத்தைச் செய்வார் என்றும் கூறப்படுகின்றது.

1952இல் எம்.ஜி.ஆர். திமுகவில் இணைந்தார். 1953இல்தான் அதிகாரப்பூர்வமாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

தான் நடித்த திரைப்படங்களில் திமுகவின் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்தார்.

1967இல் சென்னை பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார.

1970இல் திமுக பொருளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1971இல் மீண்டும் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

1971இல் திமுக 184 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சிக்குக் கட்டமைப்பு இருந்தது. திமுகவுக்கு எதிராக அதிமுக இருந்தது. 3ஆவது இடத்தில்தான் காங்கிரஸ் இருந்தது. 1972இல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின் 1973இல் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக முதல் வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆர்  5 ஆண்டுகள் காத்திருந்து ஆட்சியைப் பிடித்தார். அதன்பின் எந்த புதியக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பது வரலாறு. இந்த வரலாற்றை முறியடித்து, தவெக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.