‘அமீகோ கேரேஜ்’ பிரஸ்மீட் சேதிகள் !
இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து ...
‘அமீகோ கேரேஜ்’ பிரஸ்மீட் சேதிகள் !
People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இதையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மார்ச் 09-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் பில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் மகேந்திரன் பேசியதாவது…
நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள். அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது…
இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்குப் பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன். அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷூட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் நாகராஜன் பேசியதாவது…
இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். இப்படத்தின் இயக்குநர் என் மகன். அமீகோ என்றால் என்ன என்று அவனிடம் கேட்டேன், அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ஃபிரண்ட் என அர்த்தம் என்றார். இது நண்பர்கள் சம்பந்தமான படம். மாஸ்டர் மகேந்திரன் ஒரு நடிகராக எங்களிடம் அறிமுகமானார், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாகத் தான் பழகுகிறார்கள். இந்தப்படம் எடுக்கும் போது தான் ஒரு படம் எடுப்பது எத்தனை கடினமானது என்பது புரிந்தது. என் மகன் எடுத்துள்ள இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.
ஆக் ஷன் ரீ ஆக் ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியதாவது..
அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். நல்ல டீம் மிகச்சிறந்த ஆதரவைத் தந்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது…
2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
ஒளிப்பதிவாளர் விஜய குமார் சோலைமுத்து பேசியதாவது…
இது என் முதல் மேடை. இந்த வாய்ப்பிற்காக இயக்குநருக்கு என் நன்றி. ஒரு நல்ல படம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியதாவது..
மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
ஸ்டண்ட் இயக்குநர் டான் அசோக் பேசியதாவது…
‘அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. இயக்குநருடன்பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்”.
பாடலாசிரியர் கு.கார்த்திக் பேசியது,”இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிகையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி”.
நடிகர் தாசரதி பேசியதாவது…
இது என்னுடைய முதல் மேடை. இயக்குநர் பிரசாந்த் எனக்கு லைஃப் சேஞ்சிங் மொமண்ட் தந்துள்ளார். அவர் என் நண்பன், இங்கு எல்லோருமே நண்பர்கள் தான். இது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். படத்தை அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியதாவது…
இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
கேங்ஸ்டர் வாழ்வைச் சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தாசரதி, ஆதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணைத் தயாரிப்பு செய்துள்ளனர்.
இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
மதுரை மாறன்.