பலமுறை கூறியும் அகற்றப்படாத இறைச்சிக் கடைகள்…. அதிகாரிகளின் மெத்தனத்தால் பொதுமக்கள் கடும் அவதி… திமுக உறுப்பினர் குமுறல் ..!

0

பலமுறை கூறியும் அகற்றப்படாத இறைச்சிக் கடைகள்…. அதிகாரிகளின் மெத்தனத்தால் பொதுமக்கள் கடும் அவதி… திமுக உறுப்பினர் குமுறல் ..!

 

துறையூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் செல்வராணி தலைமை வகித்தார் துணைத் தலைவர் முரளி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது பேசிய 3-வது திமுக உறுப்பினர் கார்த்திகேயன், ” துறையூர் நகராட்சி பகுதிக்குள் உள்ள இறைச்சி கடைகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாகவும் உள்ளது. மேலும் இறைச்சி கடைகளின் முன்பு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் பன்றிகள் மற்றும் நாய்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதாகவும், இறைச்சி கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இதுவரை நடைபெற்ற 6 கூட்டங்களில் கூறியும் எவ்வித நடவடிக்கையும் நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை” என தனது குமுறலை வெளிப்படுத்தினார். அதே கோரிக்கையை துணைத் தலைவர் முரளியும் அதிகாரிகளிடத்தில் முன்வைத்து கேள்வி எழுப்பினார்.

 

திமுக உறுப்பினர் குமுறல்
திமுக உறுப்பினர் குமுறல்

 

4 bismi svs

அப்போது பதிலளித்த ஆணையர் சுரேஷ்குமார், இறைச்சி கடைகளுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார். ஆணையரின் பதில் திருப்தி அளிக்காததால், இவ்வளவு காலமாக ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை இறைச்சி கடைகளை நடத்துவதற்கு நகர்ப்புறப் பகுதிகளுக்குள் உரிய அனுமதி பெற்றுள்ளார்களா என துணைத்தலைவர் முரளி மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு சுரேஷ்குமார் இறைச்சி கடைகள் நடத்துவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று பதிலளித்தார். அனுமதி பெறவில்லை என்றால் உடனடியாக நகருக்குள் உள்ள இறைச்சிக் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடத்தில் துணைத் தலைவர் முரளி கூறினார். துணைத் தலைவர் மற்றும் உறுப்பினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். மேலும் பேசிய கார்த்திகேயன், அனிமேட்டர்ஸ் என சொல்லப்படும் தூய்மை திட்ட மேற்பார்வையாளர் ஒருவர் அவரது பணிகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து , மற்ற பணிகளில் தேவையின்றி தலையிடுவதாகவும் , இதனால் அதிகாரிகள் , கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரிய இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினார்.

- Advertisement -

- Advertisement -

நகராட்சி சாதாரணக் கூட்டம்
நகராட்சி சாதாரணக் கூட்டம்

மேலும் 13-வது வார்டுஉறுப்பினர் அம்மன் பாபு, தனது வார்டில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுத்துவதற்கு சுகாதார வளாகம் இல்லாமல் சிரமப்படுவதாகவும், பழைய சுகாதார வளாகத்தை அப்புறப்படுத்தி புதிய சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஒரு சில உறுப்பினர்கள் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அதிகாரிகளிடத்தில் கோரிக்கை வைத்தனர்.20-வது வார்டு அதிமுக உறுப்பினர் அமைதி பாலு பேசுகையில், நகராட்சிக்கென நில அளவையர் இல்லாமல் உள்ளதால் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் இது பற்றி கூறி உடனடியாக துறையூர் நகராட்சிக்கென நில அளவையர் தேவை என கோரிக்கை வைக்க வேண்டும் என பேசினார். 1 மற்றும் 39 தீர்மானங்கள் தவிர அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டன.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.