திமுக, அதிமுக என இருகட்சியினரும் பாரபட்சமின்றி ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தங்கள் இருப்பை பதிவு செய்து கொண்டது தான் இப்போது தமிழக அரசியல் மற்றும் தமிழ்த் திரையுலக வட்டாரத்தில் டாப் ஸ்பீச்சாக வலம் வருகிறது. அது வேறு யாருமல்ல அதிமுகவின் மதுரை மாவட்ட நிர்வாகியும், திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் பைனான்சியர் அன்பு செழியனின் மகள் திருமணம் தான்.
திரைப்படங்களை தாண்டி பிரம்மாண்ட செட் போட்டு நடைபெற்ற சுஷ்மிதா-சரண் திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், அமமுக நிறுவனர் ஜிஜிக்ஷி.தினகரன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தேமுதிகவைச் சேர்ந்த லிரி சுதீஷ், திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஷிறி வேலுமணி, ஜெயக்குமார், ராணிபெட் காந்தி, கு.பிச்சாண்டி, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் வலிமை படத் தயாரிப்பாளருமான போனிகபூர், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சூர்யா, பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ழி.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், திரைப்படத் தயாரிப்பாளர்கள் தாμ, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார் உட்பட தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படத்தினை சோஷியல் மீடியாவில் கண்ட நெட்டிசன்கள், ”ரஜினிக்கு ஓட்டளிக்க மட்டும் நேரமில்லை. ஆனால் சினிமா பைனான்சியர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள மட்டும் நேரமிருக்கிறதா..” என விமர்சித்து வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ, ”அது அவரது இஷ்டம். உங்களுக்கெல்லாம் அதில் என்ன கஷ்டம்”.. என பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம்(!) வாய்ந்த திருமண விழாவில் நடிகர் அஜித், விஜய் ஆகிய இரண்டு நட்சத்திர நடிகர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.