படம் சொல்லும் செய்தி -2

-ஜோ.சலோ

0

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிற சூழல். துப்பாக்கிகளுக்கு முன் குழந்தைகள் பயந்தபடியாக நிற்கும் படங்கள் சமூக ஊடகங்களை நிரப்பியிருக்கிற காலம் இது. இன்றைய சூழல் போலவே சூடானை போர்மேகம் சூழ்ந்திருந்த வேளையில் போரின் சூழலை உலக வெளிச்சத்திற்குக் கொண்டுவர நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, 1993ஆம் ஆண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.

வடக்கு சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிந்திருந்த அந்த நாடுகளின்மீது எகிப்து, பிரிட்டிஷ் ஆகிய இரண்டு நாடுகளுமே தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். 1954ஆம் ஆண்டு சூடான் குடியரசாக மாறியதுடன் அனைத்து அதிகாரங்களும் வடக்கு சூடான் கைகளுக்குச் செல்ல, தெற்கு சூடானின் மீதும் தன் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. இதனால் தெற்கு சூடான் கொதித்து எழ, உள்நாட்டுப் போர் வெடித்தது.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

16 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தப் போர், சுமார் ஐந்து லட்சம் மக்களை பலிவாங்கிய பின் 1972ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் தெற்கு சூடானில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்த வடக்கு சூடான் அந்த வருவாயைத்தானே எடுத்துக்கொள்ள விரும்ப, 1983ஆம் ஆண்டு மீண்டும் உள்நாட்டுப் போர் தொடங்கியது

1993ஆம் ஆண்டு சூடானில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் விமானத்தில் போர்ப் பாதிப்புகளைப் பதிவு செய்வதற்காக கார்டர் என்ற புகைப்படக்காரரும் சென்றார். தெற்கு சூடானின் ஒரு கிராமத்தில் இறங்கிய அந்தக் குழு அங்கு அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்கள் மூலம் உணவுகளை வழங்கின., உணவைப் பெறும் அவசரத்தில் பெற்றோரால் தனித்து விடப்பட்ட ஒரு சிறுமி நடக்கக் கூட வலிமையில்லாமல், அந்த உணவு முகாமை நோக்கி பசி முனகலுடன் தவழ்ந்து வருவதை கார்ட்டர் பார்க்கிறார். ஒரு கட்டத்தில் அவளால் முடியாமல் சோர்ந்து போய் விழுந்துவிட இந்தக் காட்சியைப் புகைப்படமெடுக்க அமர்கிறார் கார்ட்டர்.

- Advertisement -

4 bismi svs

அப்போது ஒரு கழுகு சிறுமியை அந்தச் சிறுமிக்கு அருகில் வந்து அமர்ந்தது. சுமார் இருபது நிமிடங்கள் அந்தக் கழுகு சிறகை விறிப்பதற்காக காத்திருந்த கார்ட்டர். அது நடக்கவில்லை என்பதால் மெதுவாக அந்த சிறுமியின் அருகில் சென்று அந்தக் காட்சியை தனது கேமராவில் பதிவு செய்துவிட்டு, அந்தக் கழுகை மட்டும் விரட்டிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட்டார்.

இந்தப்படம் போரினால் பாதிக்கப்பட்ட சூடானின் நிலமையை உலகத்திற்கு எடுத்துச் சொன்னது. இந்தப் படத்திற்கும் புல்ட்சர் விருது வழங்கப்பட்டது. ஆனால் கெல்வின் கார்ட்டருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. குழந்தையைக் காப்பாற்றாத அந்தப் புகைப்படக்காரருக்கு மனிதநேயமே இல்லையா? என வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு, பதில் சொல்ல இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். எந்த படத்திற்காக புலிட்சர் விருது பெற்றாரா, அந்தப்படத்தாலே 1994 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள், தற்கொலை செய்து கொண்டார்.

2011இல் தெற்கு சூடானில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின் மூலம் தெற்கு சூடான் உலகின் தனி நாடாக மலர்ந்தது. ஆனாலும் அந்தச்சிறுமிக்கு என்ன ஆயிற்று? அந்தச் சிறுமி எங்கிருக்கிறாள்? அந்தச் சிறுமியை காப்பாற்றி விட்டார்களா? உயிரோடு தானே இருக்கிறாள் அந்தச்சிறுமி? என்ற கேள்விக்கு இன்று வரை பதில் யாரிடமும் இல்லை. அந்த நேரத்தில், கழுகிற்கு இப்போது பசி இல்லாமல் இருந்திருக்கலாம். அது அப்படியே நீடித்திருக்காது. கழுகிற்குக் கொஞ்சம் பசி எடுத்தாலும் அதன் இரை அதன் கண் முன் உள்ள அந்தக் குழந்தைதான். அந்தக் குழந்தையை தூக்கிச் சென்று தன் பசியைப் போக்கிக் கொண்டிருக்கலாம்.

புலிட்சர் விருது பெற்றோர் பட்டியலில் கெல்வின் கார்ட்டர் பெயர் இருக்கிறது. ஆனால் மனிதநேய மற்றோர் பட்டியலில் அவர் முதன்மையாக்கிவிட்டது இந்தப்படம்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.