பிஜேபி தடம் மாறும் சசிகலா

- மெய்யறிவன்

0

அதிமுகவை தோற்றுவித்து சுமார் 11 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்து மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு பின்னர், “இனி அவ்வளவு தான் அதிமுக” என்ற அரசியல் விமர்சனத்தை உடைத்தெறிந்து அதிமுகவை பலம் வாய்ந்த, இந்திய அளவில் செல்வாக்குள்ள கட்சியாக வளர்த்தெடுத்தார் மறைந்த செல்வி ஜெ.ஜெயலலிதா.

ஆனால் அவரது மறைவிற்கு பின்பு அதிர்ஷ்டவசமாக கிடைத்த ஆட்சி அதிகாரத்தை நான்கு ஆண்டுகள் சேதாரமின்றி தக்க வைத்துக் கொண்ட ஈபிஎஸ்-ம், ஓபிஎஸ்-ம் கட்சியின் வலிமையை நிலைநிறுத்தி வளர்த்தெடுப்பதில் தெம்பற்றவர்களாகவே இருந்துள்ளனர் என்பது நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டிவிட்டது.

2 dhanalakshmi joseph

செல்வி ஜெ.ஜெயலலிதாவின் தோழியாக இருந்து அவருக்கு நிகரான ஒரு அதிகார தோரணையுடன் கட்சியை வழிநடத்திய சசிகலா சிறைக்குள் தள்ளப்பட்டு, நான்காண்டுகாலம் சிறைவாசம் முடிந்து வெளியேறிய பின்னர், மீண்டும் அவரை அதிமுகவிற்குள் அனுமதித்தால் நமது பதவி, அதிகாரம் அனைத்தும் பறிபோகும் என்ற எண்ணத்துடன் சசிகலாவை அனுமதிக்காமல், அமமுக என்ற கட்சி உதயத்தால் அதிமுக பலவீனமடைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல், அதிமுகவின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல், சசிகலா என்ற ஒற்றை மனுஷியை கண்டு பயந்து நடுங்கி அவரை எதிர்ப்பதை மட்டுமே தங்களது ஒற்றை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்வெல்வமும்.

கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில், சசிகலாவின் அமைதிக்கான காரணம், தண்டனை குற்றவாளிகள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டப்பிரச்சனையே..!

- Advertisement -

- Advertisement -

5 ஆண்டுகள் கடந்தாகிவிட்டது. இனி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சசிகலா விருப்பப்பட்டால் போட்டியிடலாம். ஆனால் அவரின் கைவசம் அதிமுக என்ற கட்சி இருக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே சசிகலாவின் தற்போதைய சிந்தனையாக உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் 8 மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தி.நகரிலுள்ள சசிகலா இல்லத்தில் அவரை சந்தித்துள்ளனர். அப்போது சசிகலா இரண்டு மாதத்தில் அனைத்தும் மாறும் என்று கூறியிருந்தார்.

தேர்தல் தோல்விகளால் துவண்டு கிடக்கும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமைகளுக்கு எதிராக சசிகலாவை முன் நிறுத்துவார்கள் என்ற பேச்சே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுக்குப் பிறகு முன்பைக் காட்டிலும்

4 bismi svs

பெரிதாக தமிழக அரசியலில் எதிரொலிக்க தொடங்கியது.

இதனால் அதிமுகவிற்குள் சர்ச்சை கிளர்ந்தெழும் என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், அங்குசம் இதழுக்கு கிடைத்திருக்கக் கூடிய செய்தி தமிழக அரசியல் நிலவரத்தை மட்டுமல்லாது இந்திய அரசியல் நிலவரத்தையே புரட்டிப்போடும் ஒன்றாக இருக்கிறது.

சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சமயத்தில் சிறை விதிமுறைகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து அப்போது சிறை காவல் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி ரூபா என்பவர் சசிகலா மீது குற்றம்சாட்டினார். மேலும் இதற்கு இரண்டு கோடி ரூபாய் வரை பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு சசிகலா மீது எழுந்தது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு கடந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சசிகலா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை பெங்களூர் நீதிமன்றத்திற்கு வர உள்ள நிலையில் தற்போது சசிகலா முன்ஜாமின் கேட்டு பெங்களூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சசிகலா தற்போது முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது சசிகலா கைதாகும் சூழல் இருப்பதையே காட்டுகிறது.

இது ஒருபுறமிருக்க…. தேர்தல் என்றாலே, ‘நோட்டாவுடன் போட்டியிடும் பா.ஜ.க.’ என கிண்டல் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழகம் முழுக்க 5480 இடங்களில் தனித்து போட்டியிட்டு வழக்கம் போல் பல இடங்களில் 3வது, 4வது இடங்கள், டெபாசிட் பறிபோன இடங்கள் என இருந்தாலும் 308 இடங்களில் வெற்றி பெற்றது, ‘தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு என்று செல்வாக்கு இருக்கிறது’ என தன்னை பறைசாற்றிக் கொண்டுள்ளது.

இந்த வெற்றி குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர், “பொதுவாக உள்ளாட்சி தேர்தலில், சுயேட்சைகளே வெற்றி பெறும் வேளையில், பணபலம் கொண்ட ஒரு தேசிய கட்சி பெற்ற இந்த வெற்றி பெரிதாக கவனம் கொள்ள வேண்டிய விஷயம் அல்ல” என்கிறார்கள். ஆனாலும் பா.ஜ.க. இந்த வெற்றியை ஊதிப் பெரிதாக்கி தமிழகத்தில் கட்சியை மேலும் வளர்க்க புதிய அசைன்மென்ட் ஒன்றை டெல்லி தலைமை அதிகாரிகளுக்கும், பாஜக மேலிட பொறுப்பாளர்களுக்கும் கொடுத்துள்ளதாம். இந்த அசைன்மென்ட் என்னவென்றால் சசிகலாவை பாரதிய ஜனதா கட்சிக்குள் இழுப்பது தானாம். சசிகலாவின் சொத்துக்கள் ஏற்கனவே பெருமளவில் முடக்கப்பட்ட நிலையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்த நகர்வை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி பாஜகவிடம் இருந்து சசிகலாவிற்கு அழைப்பு சென்றிருக்கிறதாம். சசிகலாவுடன் பாஜக நிர்வாகியாக உள்ள நடிகை விஜயசாந்தி சந்திப்பு ஊடகங்களின் விவாதங்களை அதிகப்படுத்தின, மேலும் டிடிவி தினகரனின் செயல்பாடுகள் குறைந்து இருக்க கூடிய நிலையில் சசிகலாவை நோக்கி வரும் அதிமுகவினரின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. அதோடு அரசியலுக்கு குட்பை சொன்ன ரஜினியோடு சசிகலா சந்தித்தது சரியான பிடிப்பு இல்லாமல் இருக்கக் கூடிய ரஜினி ரசிகர்களை சசிகலா பக்கம் இழுக்கும் திட்டமாக உள்ளது.

இப்படி மிகப் பெரிய படையோடு அதிமுகவினரை அணிதிரட்டும் சசிகலா வரும் காலங்களில் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்வார் என்பதைவிட பா.ஜ.க.விலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வார் என்றே பலரும் கூறத் தொடங்கியுள்ளனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.