மஞ்சள் “பை” அரசியல்…! முதல்வர் ஸ்டாலின் பாணியில் தளபதி விஜய் !

- ராஜன்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

மஞ்சள் “பை” அரசியல்…! முதல்வர் ஸ்டாலின் பாணியில் தளபதி விஜய் !

 

தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யை சுற்றி அரசியல் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்ற விஜய்யின் செயல்பாடு அரசியல் ரீதியாகவும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட்டு 151 இடங்களில் வெற்றி பெற்றது தமிழக அரசியல் களத்தில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அது மட்டுமின்றி வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டது அரசியல் களத்தில் விஜய்யின் பங்களிப்பை உறுதி செய்தது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இதற்கிடையே நடிகர் விஜய்யை அரசியல் கட்சி தொடங்கச் சொல்லி அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பலமுறை வலியுறுத்தியும் விஜய் அதை பொருட்படுத்தாமல் காலம் தாழ்த்தவே, எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாக களத்தில் இறங்கி, நடிகர் விஜய் சார்பாக தேர்தல் கமிஷனில் புதிய கட்சி தொடங்க முற்பட, எரிச்சலான விஜய், ‘தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி’ அவரது தந்தை, தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலைக்குச் சென்றது தனிக்கதை.

3

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினரின் ஆதரவைப் பெற பெரிய கட்சிகளும் முயன்றது ஒரு சுவாரஸ்யம்.

மேலும், தேர்தல் நாளன்று விஜய் சைக்களில் சென்று வாக்களிக்க, பா.ஜ.க.வின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துத் தான் விஜய் சைக்கிளில் வாக்குச் சாவடிக்கு வந்தார்’ என்பதாக செய்தி பரவியது. அத்துடன் விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் நிறம் கருப்பு-சிவப்பு விஜய் திமுகவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்றும் அப்போது செய்தி பரவியது.

4

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட பெரும் ஆர்வம் காட்டினர்.

ஒரு சில வார்டுகளில் யாருக்கு சீட் தருவது என பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. சுயேட்சையாக போட்டியிட்ட விஜய் ரசிகர்கள் ஆளுங்கட்சியின் ‘அலையை’ மீறி ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்களில் கிடைத்த வெற்றி நடிகர் விஜய்க்கு, “நாம் இனி அரசியல் களத்தில் கால் பதிக்கலாம்” என்ற உற்சாகத்தை தந்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் தற்போது, “தளபதியின் மாவட்ட உள்ளூர் திட்டம்” என்ற பெயருடன் களப் பணிகளில் விஜய் மக்கள் இயக்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக வயது முதிர்ந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு ஊட்டச்சத்தாக ‘நவதானியம்’ பைகளை இலவசமாக வழங்கினர் மக்கள் இயக்கத்தி னர்.  தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிறுத்தி மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். விஜய்யின் படம் பொறிக்கப்பட்ட இந்த பையை தமிழகம் முழுக்க வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலின் போது கறுப்பு-சிகப்பு வண்ணம் கொண்ட சைக்கிளில் சென்று வாக்களித்தது தமிழக முதல்வரை பின்பற்றி மஞ்சப்பை திட்டத்தை முன்னெடுப்பது “தளபதி விஜய் என்ன சொல்ல வருகிறார்” என அவரது இயக்கத்தினரிடையே கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நாம் விஜய் மக்கள் இயக்கத்தினரிடம் கேட்ட போது அவர்கள் பதில் சொல்லாமல் நழுவினர். பூனைகுட்டி வெளியே வராமலா போய்விடும்.!

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.