கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்
கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்
ஈ.பி. ரோடு மற்றும் பெரிய கடைவீதியை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்று ஐாபர்ஷா தெரு. இங்கு நடைபாதைகள் அமைத்து சாலை ஆக்கிரமிப்பு ஒருபுறம் சாதாரணமாக நடந்து கொண்டிருக்க தற்பொழுது புதியதோர் சிக்கல் உருவாகி உள்ளது.
ஏற்கனவே, ஆக்கிரமிப்பால் குறுகிப் போன இச்சாலை, போக்குவரத்து நெரிசலால் திணறி கொண்டிருக்கிறது.இப்போது சில காலமாக வாகன ஓட்டுநர்களை வெறுப்பேற்றும் வகையில் தண்ணீர் சப்ளை செய்யும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூராக குறைந்தபட்சம் அரை மணி நேரம் சாலை நடுவில் நிறுத்தி வைக்க படுகின்றன.
இதனால் பாதசாரிகள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாவதாக இப்பகுதி வாசிகளிடையே குற்றசாட்டு எழுந்துள்ளது.
-பிரியங்கா நாகராஜ்