மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி கல்வி சான்றிதல் கொடுத்து பணியில் ஊழியர்கள் !

0

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி கல்வி சான்றிதல் அளித்து பணியில் இருக்கும் ஊழியர்கள் மீதும், கோவில் தக்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர் சோலைகண்ணன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்..

அந்த அறிக்கையில்….

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் சுமார் 168 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இக்கோவிலில் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 2008-ல் சேவுகர்,காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பள்ளி கல்வி சான்றிதழிலின் அடிப்படையில் ஆட்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் போலி கல்வி தகுதி சான்றிதழ் கொடுத்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கோவிலில் பணிபுரிந்து வருகிறார்கள் என்று முந்தைய கோவில் இணைஆணையராக இருந்த செல்லத்துரை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலியான சான்றிதழ் அளித்து கோவில் பணியில் இருப்பவர்கள் மீது எந்த ஒரு சான்றிதழையும் ஆய்வு செய்யாமல் பணியில் அமர்த்திய கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த வருடம் இந்துமக்கள்கட்சி சார்பாக கோரிக்கை புகார் அளித்தோம். மற்றும் இது சம்பந்தமாக கோவிலில் பணிபுரியும் போலியானவர்களை பற்றி நாளிதழ்களும் தொடர்ந்து சுட்டி காட்டி செய்தி வெளியிட்டு இருந்தும் கோவில் நிர்வாகம் இதுவரைக்கும் போலி நபர்கள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விசாரணையை தற்பொழுது வரைக்கும் கிடப்பில் போட்டுள்ளதை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சோலைகண்ணன்  இந்துமக்கள்கட்சி மதுரை மாவட்டத்தலைவர்
சோலைகண்ணன்
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்
- Advertisement -

- Advertisement -

4 bismi svs

மேலும் குற்றம் சாட்டப்பட்ட போலி நபர்கள் அரசு சம்பளத்துடன் இக்கோவிலில் சுதந்திரமாக சுற்றி வருவது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது
உண்மையான கல்வி தகுதியுடன் கோவிலில் பணிபுரிபவர்களுக்கு கோவிலில் மரியாதை இல்லை என்று தகவல் வருகிறது இந்த போலி நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க கூடாதென்று ஆளுங்கட்சியினரும் ஆட்சியாளர்களும், கோவில் தக்காரின் தலையீடு இருப்பதால் தான் போலியான நபர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறதுஆகவே உண்மையாக படித்தவர்களுக்கு கோவிலில் வேலை கிடைக்க செய்யாமல் அரசு வேலை பெறுவதற்காக போலி கல்வி ஆவணம்,பொய்யான தகவல் அளித்து அரசாங்கத்தை ஏமாற்றிகோவிலில் பணிபுரியும் நபர்களை உடனடியாக பணிநீக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல் சம்பளம் மற்றும் சலுகைகளை திரும்பப்பெற்று அரசாங்கத்தை ஏமாற்றி சட்டவிரோத மாக பணியில் சேர்ந்த மேற்கண்ட போலி நபர்களை கைது செய்ய தற்பொழுதுள்ள மீனாட்சி அம்மன் கோவில் துணையாளராக இருக்கும் அருணாச்சலம் இனியும் காலம் தாழ்த்தாமல் எந்த ஒரு தலையீடுக்கு அஞ்சாமல் துரிதமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

மேலும் போலி கல்வி சான்றிதழ் மூலமாக மோசடியாக வேலையில் சேர்ந்ததற்க்கு தக்கரின் அலட்சியம், அஜாக்கிரதையும் தான் முக்கிய காரணம்தக்காருக்கு தெரியாமல் இந்த மோசடி நடைபெற வாய்ப்பில்லைஆகையால் ஆட்சியாளர்களின் ஆசியுடன் பல வருடங்களாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தக்கராக இருக்கும் கருமுத்து கண்ணன் கோவில் தக்கராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டார்உலகப் புகழ்பெற்ற லட்சகணக்கான மக்கள் வந்து செல்லும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வளர்ச்சிக்காவும், நன்மைக்காகவும்,பக்தர்களின் அடிப்படை வசதிக்காகவும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும்முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களுக்கு துணை போனவராக கருதக்கூடும் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தக்கர் பதவியை ஏலம் எடுத்தது போல் கடந்த பதினைந்து வருடங்களாக மீனாட்சி அம்மன் கோவில் தக்கராக ஒரே நபராக இருக்கும் கருமுத்து கண்ணனின் தக்கார் பதவியில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் வந்து கோவிலின் வளர்ச்சியையும்,பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நல்ல தகுதி வாய்ந்த எந்த ஒரு அரசியல் குறிக்கீடு இல்லாத தெய்வத் தொண்டாற்றும் ஆன்மீக சிந்தனை கொண்ட அப்பழுக்கற்ற தெய்வபக்தியுள்ள நேர்மையான நியாயமான சிரித்த முகத்துடன் இருக்கும் ஒருவரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கராக்க நியமிக்கவேண்டும் என்பதை இந்த அறிக்கையின் வெளியிட்டுள்ளார்.

– சாகுல்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.