உடல் நலம் புகை உயிருக்குப் பகை – திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உடல் நலம் புகை உயிருக்குப் பகை – திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றிமாறன்’ என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும்.

Sri Kumaran Mini HAll Trichy

21 வயதுக்கு முன்னர்ப் புகைக்கத் தொடங்கினால், நமது உறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது. `நிகோடின், பிரவுன்சுகரைவிட அடிக்ஷனான விஷயம்’ என்கிறார்கள். ஆனால், அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கிறது.

புகையிலைப் பொருட்கள்தான் முதலில் தடை செய்யப்படவேண்டிய போதைப்பொருள் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு சிகரெட் என்னைப் பாதித்திருக்கிறது. ஒரு நாளில் ஐந்து சிகரெட்டில் தொடங்கி, `பொல்லாதவன்’ சமயத்தில் ஒரு நாளைக்கு 170 சிகரெட்களைப் புகைக்கும் நிலைக்குச் சென்றிருந்தேன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

`பொல்லாதவன்’ வெளியீட்டுக்குப் பிறகு ஒருநாள் ஈ.சி.ஜி எடுத்துப்பார்த்தேன். நார்மலாக இல்லை எனத் தெரிந்ததும் `ஆஞ்சியோ செய்து பார்க்க வேண்டுமா?’ எனக் கார்டியாலஜிஸ்ட் முரளிதரனிடம் கேட்டேன். அறிக்கையைப் பார்த்த டாக்டர், `ஆஞ்சியோ ஆப்ஷனல். ஆனா, சிகரெட்டைக் கட்டாயம் விடணும்’ என்றார். வீடு திரும்பும் வழியில் என்ன செய்யலாம் என்பதையும் சிகரெட் பிடித்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். புகைக்காத என் நண்பர்கள் என்னைவிட ஃபிட்டாக இருந்ததைக் கவனித்தேன். நானும் ஃபிட் ஆக வேண்டும் என நினைத்து, ஒரு மாதம் சிகரெட்டைத் தொடாமல் இருந்தேன். இனி நிச்சயம் சிகரெட்டைத் தொடமாட்டோம் என்ற நம்பிக்கை கிடைத்தது.

திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்
திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

Flats in Trichy for Sale

ஒருநாள், திரைக்கதை எழுதும் பணியில் ஏதோ ஒரு நெருக்கடி வந்தது. அப்போது உதவியாளர் ரவியிடம் (`ஈட்டி’ பட இயக்குநர்) சிகரெட் வாங்கி வரச் சொன்னேன். நான் விட்டுவிட்டேன் எனத் தெரிந்ததால் தயங்கித் தயங்கித் தான் ஒரு பாக்கெட் வாங்கிவந்தார். அன்று 30 நாளைக்கும் சேர்த்துப் புகைத்துவிட்டேன். பாக்கெட்டில் இருந்த 10 சிகரெட்களையும் வரிசையாகப் புகைத்தேன். என் உடலுக்கு அவ்வளவு நிகோடின் தேவைப்பட்டது. ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே விட முடிந்தது. நான்காவது நாள் காலை நான் சிகரெட்டை விட்டுவிட்டேன் என்பதையே மறந்துவிட்டுச் சிகரெட்டைக் கையில் எடுத்து விட்டேன். சிகரெட்டை  நிறுத்துவது என முடிவெடுத்துவிட்டால் அது நம் கண் பார்வையிலே இருக்கக் கூடாது. மற்ற எல்லா அடிக்ஷனைவிடவும் புகை தந்திரமானது. என்றாவது ஒருநாள் சிகரெட் நம்மை மீண்டும் வென்றுவிடும்.  நான் மீண்டும் புகைக்க ஆரம்பித்தது என்னை டீமோட்டிவேட் செய்தது. ஒருமுறை நிறுத்திவிட்டு மீண்டும் புகைக்கும்போது உடல் இன்னும் மோசமானது.

டாக்டர் முரளிதரனைச் சந்தித்து மீண்டும் மீண்டும் புகைப்பதை அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் `அப்படித்தான் ஆகும். ஒரு வாரம் நிறுத்தி ஆரம்பிப்பீங்க. அடுத்த தடவை ஒரு மாசம். அப்புறம் ஆறு மாசம் ஆகும். இப்படியே தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தால் ஏழாவது தடவைக்குள் உங்களுக்கே தெரியாம நிரந்தரமா நிறுத்திடுவீங்க. என்றார். `சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது எல்லாம் 200 மி.லி. குளிர்ந்த நீர் குடித்தால், அந்த எண்ணம் தள்ளிப் போகும்’ என அவர் ஒரு ஐடியா தந்தார். என்னால் நம்ப முடியவில்லை.

சிகரெட்டை, உலகம் முழுக்கவே வீரத்துடன் உருவகப்படுத்தி இருக்கிறார்கள். நண்பர்கள் என்றால் புகைக்க வேண்டும், காதல் தோல்வி என்றால் தாடியும் சிகரெட்டும் கட்டாயம் என நம்ப வைத்ததில் திரைப்படத்துக்குப் பெரும்பங்கு உண்டு. நான் சிகரெட் பிடிக்கத் தொடங்கினதும் திரைப்படத்தைப் பார்த்துத்தான்; விட்டதும் திரைப்படத்தைப் பார்த்துத்தான். 20 ஆண்டுகளாகப் புகைபிடித்த நான், புகையை நிறுத்துவதற்கு `வாரணம் ஆயிரம்’  ஏதோ ஒரு வகையில் உந்துசக்தியாய் இருந்தது. ஒரு ஃபிலிம் மேக்கராக கௌதம்மேனன் அவர்களின் மிகப்பெரிய வெற்றியாக நான் இதைப் பார்க்கிறேன்.

நான் புகைப்பதை நிறுத்தியதும் `அலுவலகத்தில் யாரும் புகைக்கக்கூடாது’ எனச் சொல்லிவிட்டேன். ஏ.சி. அறைக்குள் புகைப்பது என் வழக்கம். அந்த ஒரு வாரக்காலம் அலுவலகத்தில் புகைவாசனையே வரவில்லை. எட்டாவது நாள் சிகரெட்டை மனது இன்னும் தீவிரமாகத் தேடியது. தண்ணீர் குடித்ததும் கொஞ்சம் ரிலீஃப் ஆக இருந்தது. புகைப்பதை மறக்கச் சூயிங்கமும் பழங்களும் உதவின. கொய்யாப்பழம், திராட்சை, மாதுளை போன்ற ஃப்ரெஷ்ஷான பழங்களைச் சாப்பிட்டால் அந்த ஜூஸ் உடம்புக்குள் இறங்குவதே இதமாக இருக்கும். நான் புகைப்பதை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்.  58 முதல் 62-க்கு மேல் என் எடை எப்போதும் கூடியது இல்லை. தொடர்ந்த உடற்பயிற்சிகளால் 68 கிலோ ஆனது. `ஆடுகளம்’ படத்துக்கு அந்தப் பலம் தேவைப்பட்டது. அதீத உடல் உழைப்பு தேவைப்பட்ட புராஜெக்ட் அது. `ஆடுகளம்’ நான் நினைத்தது போல ஓரளவுக்கு வரச் சிகரெட்டை நான் நிறுத்தியது ஒரு முக்கியமான காரணம்.

புகைப்பதை விட்டால் நாம் தூங்கும் நேரம் சரியாகும். ஒரு கட்டுக்கோப்பில் நம்மால் இருக்கமுடியும். இன்னும் ஆர்வத்துடன் காமத்தைக் கொண்டாட முடியும். நம் வாழ்க்கை இன்னும் அழகாக மாறும். இது எல்லாமே என் வாழ்வில் நான் அனுபவித்துச் சொல்கிறேன். இந்தச் சமூகத்துக்கு நாம் ஏதாவது பங்களிக்க வேண்டும் என்றால், நிகோடின் இல்லாமல் வாழ்ந்தாலே போதும் என நினைக்கிறேன்.

புகை பிடிப்பவர்கள் அதை நிறுத்தினால் நல்லது. பிடிக்காதவர்கள் அதைத் தொடங்காமலே இருந்தால் மிகவும் நல்லது. இதை நான் இன்று புகைப்பதை விட்டதால் சொல்லவில்லை, முன்னர் நான் புகைத்ததால் சொல்கிறேன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.