கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற  சட்டப்படி நடவடிக்கை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கர்நாடகத்திடம் இருந்து
தண்ணீரைப் பெற  சட்டப்படி நடவடிக்கை!

கர்நாடகத்திடம் இருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற தமிழக முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen


இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “மேட்டூர் அணையில் தற்போது போதுமான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. நமக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத் தர தமிழக முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்,” என்றார்.

மேலும், தமிழக முதல்வர் அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நிகழாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என்றும், இதற்காக 4,045 டன்; விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4,046 டன விதைகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

இதேபோல, யூரியா, டிஏபி போன்ற உரங்கள் 1,07,289 டன்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு தயார் நிலையில் உள்ளது. தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றார் அமைச்சர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு விவசாய கடனாக ரூ.12,000 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதையும் விஞ்சி ரூ.13,000 கோடிக்கு விவசாய கடன் வழங்கப்பட்டது என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.

இந்த ஆண்டு ரூ.14,000 கோடி விவசாய கடன் வழங்குமாறு தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் சிட்டா, அடங்கல் போன்றவற்றை கொடுத்து கடன் பெறலாம் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.