சொந்த தொகுதியிலேயே எதிர்ப்பு… திமுக அமைச்சரை விரட்டிய பொதுமக்கள்…
சொந்த தொகுதியிலேயே எதிர்ப்பு… திமுக அமைச்சரை விரட்டிய பொதுமக்கள்…
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள ‘குன்னம்’ தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப் பவர் சிவசங்கர். ஏற்கனவே வேறு துறையில் அமைச்சராக இருந்த இவர் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார்.
கடந்த சில வாரங்களாக 2 மாவட்ட எல்லைகளில் உள்ள தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டத் தில், சில பகுதிகளில் அவர் நன்றி தெரிவித்த நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தெற்கு மாதவி என்ற கிராமத்துக்கு நன்றி தெரிவிக்க அமைச்சர் வருவது குறித்து ஏற்கனவே தகவல் அறிந்த பொது மக்கள் மருதையாறு பாலம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே அமர்ந்து அமைச்சரை ஊருக் குள் வரக்கூடாது என்று கோஷமிட்டனர். மேலும் மருதையாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் வடிவால் வசதி இல்லாத சூழ்நிலை குறித்து அமைச்சரிடம் முறையிட்டனர்.
இதில் ஒரு சிலர் ஒருபடி மேலே போய், “அமைச்சர் வாகனத்தை ஊருக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம். திரும்பிப் போ” என்று குரல் கொடுத்தனர். இதனால் போலீசாருக்கு தர்ம சங்கட மான சூழ்நிலை ஏற்பட்டது. சூழ்நிலையை கருத்தில் கொண்ட அமைச்சர் சிவசங்கர் வேறு வழியில்லாமல் ஊருக்குள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க செல்லாமல் விதியே என்று நொந்தபடியே திரும்பி சென்றார். அமைச்சரை சொந்த தொகுதிக்குள்ளேயே வரக் கூடாது என்று பொது மக்களை விரட்டி அடித்த சம்பவத்தால் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட எல்லை யில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
-அரியலூர் சட்டநாதன்