“தமிழால் கிடைத்த உறவே”

0

“தமிழால் கிடைத்த உறவே”

“இரவின் நிழல்” என்றப் படத்தில் என் தங்கை “ரேகா நாயர்” நடித்துள்ளது அளவற்ற மகிழ்ச்சி. இந்தப் படம் ஆஸ்கார் விருதை பெறும், பெற வேண்டும். ஒரு வேளை ஒத்த செருப்பைப் போல ஒரங்கட்டப்படலாம் அதற்காக பார்த்திபன் வருத்தப்படலாமா? என்றால் வருத்தப்படக் கூடாது. பார்த்திபனை புதிய பாதையிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். நல்லவரா கெட்டவரா என்றால் அது தெரியாது, அது தேவையும் இல்லை. ஆனால் ஆகச்சிறந்த இயக்குனர். ஆகச்சிறந்த நடிகன்.

நான் காவல் துறையில் பயிற்சியில் இருந்த பொழுது என் தோழிகள் கவிதை எழுதச் சொல்வார்கள். ஒருமுறை பார்த்திபன் பற்றி ஒரு கவிதை எழுதி எல்லோர் முன்பும் வாசித்துக் காட்டினேன். போதை வஸ்துகளில் பார்த்திபன் பெயரை பத்தாவது இடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த கவிதை முடியும். அன்றிலிருந்து பார்த்திபா என்று தோழிகள் என்னை கிண்டல் செய்த காலங்கள் உண்டு. இயக்குனர் பார்த்திபன் திறமையானவர்.

பார்த்திபன் எனும் வில்லிலிருந்து புறப்பட்ட நிறைய அம்புகள் மீண்டும் பார்த்திபனின் நெஞ்சைத்தான் தேடின என்பது பார்த்திபனை தெரிந்த எல்லோருக்கும் தெரியும். “காதலியை விட காதல் ரொம்ப புடிக்கும், ஏன்னா? காதலி விட்டுட்டுப் போனா கூட காதல் நம்ம கூடவே இருக்கும்” என்பார் பார்த்திபன். இயக்குனர் பார்த்திபன், நடிகர் பார்த்திபன் என்பதை விடவும் ஆகச்சிறந்த அறிவாளி புத்திசாலி பார்த்திபன். தன்னையே இயந்திரமாக்கி, அதில் தன்னையே எடைக்கல்லாக்கி, அதில் தன்னையே பொருளாக்கி, அதில் வேறொரு பொருளை வைத்து நிறுத்துப் பார்க்காமல் தன்னையே வைத்து நிறுப்பவர் தான் பார்த்திபன் என்ற அவரைப் பற்றின புரிதல் ஒரு ரசிகையாய் எனக்கு எப்போதும் உண்டு.

’இரவின் நிழல்’ என்ற படத்தில் தங்கை ரேகா நாயருக்கு கொடுக்கப்பட்டது சிறிய பாத்திரம் என்றாலும் மிகப்பெரிய கதாநாயகியை விட சிறப்பாய் நடித்திருக்கிறாள். அலைகள் அழிக்குமென்று தெரிந்தே அவள் பெயரை கடற்கரையில் எழுதி மகிழ்பவள் ரேகா. காதலோ காமமோ திரைப்போட்டு பேசத்தெரியாத பச்சைக்கிளி ரேகா. ‘இரவின் நிழல்’ படத்தில் அவள் மார்பு தெரியும்படி நடித்திருக்கிறாள். அந்த காட்சி காமமாக பார்க்க முடியாத காட்சி. பலவந்தப்படுத்தி திறப்பதை விட தானாக திறந்து காட்டுதலில் தான் வலி அதிகம். அதை தைரியமாக செய்திருக்கிறாள் ரேகா.

“மார்பு என்பது கவர்ச்சியான ஒன்றுதான் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது ஒரு அற்புதமான “உணவு கலையம்”. நாட்டில் நடக்கும் அவலங்களையும் அசிங்கங்களைம் மக்களுக்கு எடுத்துரைக்க, கண்ணியமான நிர்வாணங்களும், ஆடை விலகளும் இந்தப் படத்திற்கு தேவைப்பட்டிருக்கிறது. அறையில் அம்மணமாய் கிடப்பவர்கள் திரையில் திறக்க பேரம் பேசும் இந்தக் காலத்தில் எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் பெண்களின் நிலையை எடுத்துக்காட்டி நடித்த தங்கை ரேகாவுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பார்த்திபனுக்கும் நன்றி. வாழ்த்துகள்  – ரேகா.

-கவிசெல்வா

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.