பெரியார் நினைவு சமத்துவரம் திட்டத்தின் கீழ் சமத்துவபுர வீடுகளுக்கு தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம்,தளுகை ஊராட்சி, த.மங்கம்பட்டிபுதூரில் பெரியார் நினைவு சமத்துவரம் திட்டத்தின் கீழ்  புதிதாக அமையவுள்ள  100 (நூறு மட்டும்) (SC-40> BC-25> MBC-25 மற்றும் OC-10) சமத்துவபுர வீடுகளுக்கு தளுகை ஊராட்சியிலிருந்து தகுதியான வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி திட்டத்தில் பயனடைய விரும்பும் வீடற்ற தகுதியுள்ள பயனாளிகள் இசைவு கடிதத்துடன் ஆதார் அட்டை,சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)-க்கு 29.11.2024-தேதிக்குள் சமர்ப்பிக்கத் தெரிவிக்கப்படுகிறது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை குடும்ப தலைவியாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவத்தினர், ஓய்வுபெற்ற துணை இராணுவ உறுப்பினர்கள், ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ள குடும்பங்கள்.

சமத்துவபுரவீடுகள் திட்டம்
சமத்துவபுரவீடுகள் திட்டம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

திருநங்கைகள், HIV/AIDS/TB போன்ற நோய்கள் சம்மந்தப்பட்ட துணை இயக்குநர்(சுகாதாரபணிகள்) சான்றிளிக்கப்பட்ட நபர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ,வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர்கள், ஏழைமக்கள் பங்கேற்புடன் கூடிய ஏழைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள் ஆகிய நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.  மேற்கண்ட  தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.