உடல் தகுதியுடன் இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல !

0

 

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை சார்பில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி ரத்னா குளோபல் மருத்துவமனை பணியாளர்களுக்கு நடைபெற்றது. ரத்னா குளோபல் மருத்துவமனை மனித வள மேலாண்மை மேற்பார்வையாளர் ரேகா முன்னிலை வகித்தார்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து பேசுகையில் ஆரோக்கியமாக வாழ்வது என்பது ஒரு வாழ்க்கை முறை. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மகிழ்ச்சியான, நிலையான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வழங்குகிறது. , நாம் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம் மற்றும் குறுகிய காலத்தில் வெற்றியை அடைய பல முயற்சியினை எடுக்கிறோம். இதன் மூலம் நமது இலக்குகளை அடைவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் பல்வேறு நோய்கள் மற்றும் இயலாமைகளுக்கு வழிவகுக்கும். இப்போதெல்லாம், மாறிவரும் வாழ்க்கை முறைகள், அதிகரித்த எதிர்பார்ப்புகள் மற்றும் செலவுகள் காரணமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது கடினமாக உள்ளது. உடல் தகுதியுடன் இருப்பது என்பது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல, உண்மையான அர்த்தம் நல்ல ஆரோக்கியம் இருந்தால், உடல் நல ரீதியாகவும் உள நல ரீதியாகவும் ஆரோக்கியமாக இருத்தல் ஆகும். பல்வேறு காரணிகள் வாழ்க்கைத் தரத்தை பாதித்தாலும், ஒவ்வொருவருக்கும் அவரது எண்ணம் சொல் செயல் பழக்கவழக்கங்களே வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள், நல்ல பழக்கவழக்கங்களே வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்ளுங்கள்.

4 bismi svs

- Advertisement -

- Advertisement -

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியினை மேற்கொண்டால் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழியாகும் . நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியானது எடையை பராமரிக்கவும், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தவும், நீரிழிவு, இதய பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் பழக்கம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். வழக்கமான உணவில் பல்வேறு காய்கறிகள், தானிய வகைகள், கீரைகள் இருக்க வேண்டும். உணவில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும்.

போதுமான அளவு குடிநீர் அருந்துங்கள் நல்ல தூக்கத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் உடல் சுகாதாரத்தை பராமரியுங்கள் மன அழுத்தத்தை தவிருங்கள். சிரித்த முகத்துடன் வாழ்க்கையினை வாழுங்கள் என்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி மேகலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.