பழனியில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் – கோயில் நிர்வாகம் அதிரடி !

0

பழனியில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் – கோயில் நிர்வாகம் அதிரடி ! பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்த உப கோயிலான பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு பாளையம் விநாயகர் திருக்கோயிலில் முன்பாக பக்தர்களுக்கு இடையூறாகவும் கோயிலின் தோற்றத்தினை மறைக்கும் விதத்திலும் அமைந்த கடைகளை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அகற்றி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான வணிக கடைகளுக்கு இத்துறையின் சட்டப்பிரிவு 34(ஏ) ன் கீழ் நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதை எதிர்த்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வாடகைதாரர்களால் தொடரப்பட்ட ரிட் மனுக்களில் வாடகை காலம் முடிவடைந்து விட்டதால் வாடகைதாரர்களை உடன் வெளியேற்றிட 22.03.2021ல் உத்தரவு வழங்கப்பட்டது.

ஆக்கிரமிப்புக்கு முன்பும் பின்பும்
ஆக்கிரமிப்புக்கு முன்பும் பின்பும்
4 bismi svs

இத்தீர்ப்பினை எதிர்த்து டெல்லி மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு எண்.SLP.11225/2021 முதல் 11256/2021 முடிய வழக்குகள் திருக்கோயிலுக்கு எதிராக நடைபெற்றன. இந்த வழக்குகளில் கடந்த 23.02.2024-ஆம் தேதியன்று திருக்கோயிலுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு பாளையம் விநாயகர் திருக்கோயிலில் உள்ள 4 கடைகள் திருக்கோயிலின் முன்பகுதியில் எழில்மிகு தோற்றத்தினை மறைத்தும், பல ஆண்டு காலமாக பக்தர்கள் எளிதாக வழிபட முடியாமல் திருக்கோயிலை மறைக்கப்பட்டு கடைகள் இருந்தன.

- Advertisement -

- Advertisement -

மேற்படி கடைகளை முழுமையாக அகற்றி திருக்கோயில் வெளியில் தெரியும் வகையில் பக்தர்களின் பார்வையில் நன்கு தெரியும் வகையில் முழுமையாக கட்டி முடித்திடவும், திருப்பணி செய்திட ஏதுவாகவும், பக்தர்கள் சிரமமின்றி திருக்கோயிலில் வழிபாடு செய்திட ஏதுவாகவும் இன்று 29.02.2024-ல் இடித்து மேற்படி 4 கடைகளும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. திருக்கோயிலில் திருப்பணி செய்து முழுமையான திருக்கோயிலாக கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் திருகுடமுழுக்கு நடத்தப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.” என்பதாக விளக்கமளித்திருக்கிறார்கள்.

– ராமதாஸ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.