அங்குசம் பார்வையில் ‘ரூட் நம்பர் 17’. படம் எப்படி இருக்கு !

0

அங்குசம் பார்வையில் ‘ரூட் நம்பர் 17’

'ரூட் நம்பர் 17'
‘ரூட் நம்பர் 17’

தயாரிப்பு: ‘நேனி எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ்’ டாக்டர்.அமர் ராமச்சந்திரன். டைரக்டர்: அபிலாஷ் ஜி.தேவன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்ட்யா, ஹரிஷ் பெராடி, மதன் குமார், டாக்டர். அமர் ராமச்சந்திரன், அகில் பிராபகர், ஜெனிபர். ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரனவம், இசை: அவுசப்பச்சன், எடிட்டிங்: அகிலேஷ் மோகன், ஆர்ட் டைரக்டர்: முரளி. பிஆர்ஓ: ஜான்

தென்காசி அருகே உள்ள அடர்த்தியான வனப்பகுதிக்குள் செல்கிறார்கள் இளம் ஜோடி அகில் பிரபாகரும் அஞ்சு பாண்ட் யாவும். இயற்கையை ரசித்து, அனுபவித்த பின் இரவில் என்ஜாய் பண்ணுகிறார்கள். திடீரென ஒரு உருவம் வந்து அவர்களைத் தாக்குகிறது. இருவரும் கண் முழித்து பார்க்கும் போது அதல பாதாளத்தில் கிடக்கிறார்கள்.

அஞ்சு தங்கியிருந்த ஹாஸ்டல் வார்டன், தென்காசி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமர் ராமச்சந்திரனிடம் புகார் கொடுத்துவிட்டு, அஞ்சு வை அழைத்துச் சென்றது, மாஜி அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் என்று சொல்கிறார். உடனே சுறுசுறுப்பாக களம் இறங்குகிறார்கள் இன்பெக்டர், கான்ஸ்டபிள் மதன் குமார் மற்றும் லேடி போலீஸ் ஒருவர். இதற்கிடையே பாதாளத்திற்குள் சிக்கிய ஜோடி தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியடைகின்றன.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

அகில் பிரபாகரை பலமாக தாக்கி குளோஸ் பண்ணுகிறது அந்த உருவம். இன்ஸ்பெக்டர் அமர் ராமச்சந்திரனும் தேடுதல் வேட்டைக்கு சென்ற போது அதே உருவத்தால் தாக்கப்பட்டு அதே பாதாளக் குகைக்குள் அடைக்கப்படுகிறார். இதையடுத்து பழைய வழக்கு ஃபைல் ஒன்றைப் புரட்டும் போது கான்ஸ்டபிள் மதன் குமார் மூளைக்குள் பொறி தட்டுகிறது. அவரும் தனியாக காட்டுக்குள் செல்கிறார்.

அந்த மர்ம உருவம் தான் ஜித்தன் ரமேஷ். இவர் ஏன் அந்த காட்டுப் பகுதியில் இந்த வேலைகளைச் செய்கிறார் என்பதை ஃப்ளாஷ் பேக்கில் வெயிட்டான கதையை கனெக்ட் பண்ணி, பார்வையாளன் எதிர்பார்த்த க்ளைமாக்ஸையும் வைத்துள்ளார் டைரக்டர் அபிலாஷ் தேவன். மொத்தமே இரண்டு பக்க அளவில் தான் ஜித்தன் ரமேஷுக்கு வசனம். காரணம் தனது பெர்ஃபாமென்ஸை சிறப்பாக கொடுக்க, கடுமையான உழைப்பைத் தந்துள்ளார்.

ஹீரோயின் அஞ்சுவும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் ஆள் பார்க்க லொசுக்குன்னு இருக்கார். இன்ஸ்பெக்டர் வேடத்தில் அமர் ராமச்சந்திரன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆனால் இவரை விட கான்ஸ்டபிள் மதன் குமாருக்குத் தான் அதிக வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர். திகிலூட்டும் பின்னணி இசையால் படத்திற்கு பலமாக மியூசிக் டைரக்டர் அவுசப்பச்சன் இருந்தாலும் கேமரா மேனும் ஆர்ட் டைரக்டரும் அரும்பாடு பட்டிருப்பது படம் பார்க்கும் போதே தெரிகிறது.

ஏங்க டைரக்டரே…. மேக்கிங்கிற்கு ரொம்பவே மெனக்கட்டீங்க சரி, சம்பவம் நடப்பதெல்லாம் தென்காசி போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ள. ஆனா டிவி நியூஸ்ல சத்தியமங்கலம் வனப்பகுதியில் மர்ம விபத்துகள், மரணங்கள்னு சொல்லி சோலிய முடிச்சுட்டீகளப்பு.

–மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.