செகன்ட் இன்னிங்ஸ் ரெய்டு… மீண்டும் சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

செகன்ட் இன்னிங்ஸ் ரெய்டு… மீண்டும் சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் சிக்கிய முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தற்போது செகண்ட் இன்னிங்ஸ் ரெய்டு தொடங்க இருக்கிறது திமுக அரசு.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

முதல் ரவுண்டிலேயே 52 இடங்களில் சோதனை மேற்கொண்டு ரூ.2.87 கோடி பணம், 6.637 கிலோ கிராம் தங்க நகைகள், 13.85 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பத்திரங்கள் என பறிமுதல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் ஆட்சியின் போது கிராணைட், கிரஷர்கள் டெண்டர் எடுப்பதில் உள்ள வழிமுறைகள் எளிதாக்கியதால் தமிழகத்திலிருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்தில் கிராணைட், கிரஷர்களை டெண்டர் எடுத்து, பணிகளை வேறு நிறுவனத்திற்கு கொடுத்து காசு பார்த்து வந்தனர்.

3

15ல் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கடி திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு ‘யு’டர்ன் அடித்து தெலுங்கானா சென்று கிராணைட் பிசினஸில் கிடைத்த வருமானத்தை அள்ளிக் கொண்டு வந்து அதில் பெரும் பகுதியினை தனது சிறிய மருமகள் பெயரில் பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது. சிறிய மருமகள் பெயரில் உள்ள சொத்தின் மதிப்பு 600 சதவீதம் உயர்ந்துள்ளதை கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்டமாக தெலுங்கானா மாநிலம் முழுக்க சல்லடை போட்டு கே.பி.அன்பழகன் மூலமாக நடைபெறும் பிசினஸ் அனைத்தையும் ரவுண்ட் கட்டி விபரங்களை சேகரித்து வைத்திருக்கிறது. வந்த வருமானத்தில் வெளிநாட்டிலும் சொத்து வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை கண்டுபிடித்துள்ளது.

மே இறுதிக்குள் மீண்டும் கே.பி.அன்பழகன் மற்றும் சிறிய மருமகள் வீட்டுவாசலில் பிரியாணி வாசம் வீசும் (தொண்டர்களுக்குத் தான்) என்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரம்.  இதையறிந்த அன்பழகன் வட்டாரம் சின்ன மருமகளுக்கு முன்ஜாமீன் பெற சுப்ரீம் கோர்ட் வரை வேலை நடந்து வருகிறது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.