ஆட்டம் துவங்கப் போகிறது… பணத்தை இழக்க வாங்க..

0

ஆட்டம் துவங்கப் போகிறது… பணத்தை இழக்க வாங்க..

இந்தியாவில் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஆண்டுக்கு ரூ.18,700 கோடி வர்த்தகம் நடக்கிறது. இதில் ஆன்லைன் விளையாட்டு சூதாட்டமும் ஒன்று. கிரிக்கெட் மோகத்தால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெற்றோர்கள் தரும் பாக்கெட் மணியை மாணவர்களும், சம்பள பணத்தை வேலைக்கு செல்லும் இளைஞர்களும் சூதாடி தொலைத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை சுமார் எட்டு கோடி.

https://businesstrichy.com/the-royal-mahal/

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டில் “ட்ரீம்-11” நிறுவனம் தான் பிரபலமானது. பல நூறு கோடிகளை தினம் அள்ளிக் கொண்டு இருக்கிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் மிகப்பெரிய ஸ்பான்சர் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம் தொலைக்காட்சி விளம்பரங்களில் “இந்த விளையாட்டில் பணம் இழக்கும் அபாயம் இருக்கிறது” என்று கூறி விளம்பரத்தை முடிக்கும்.

இந்நிறுவனத்தில் 10 கோடி பேர் சூதாட, இல்லை! இல்லை!!, “ஆன்லைனில் விளையாட” பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 80 சதவீதம் பேர் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். ஒரு ஆன்ராய்டு செல்போன் இருந்தால் போதும். இந்த சூது விளையாட்டை ஆடிவிடலாம். முதல் ஆட்டத்திற்கு பணத்தை அந்த நிறுவனமே இலவசமாக தந்துவிடும். இலவசத்தில் ஆடும் முதல் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு பணம் கட்டி தொடர்ந்து விளையாட துவங்கி விடுகிறார்கள். ஆட்டம் துவங்கப் போகிறது… ஆடவாங்க.. என செல்போனுக்கு அழைப்பு அலாரம் தவறாமல் அனுப்பிவிடும். ஆடுபவர்கள் வங்கி தரவுகள், வருமானவரி கணக்கு எண் போன்ற தகவல்களையும் இந்நிறுவனம் பெற்று விடுகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விளையாடுபவர்கள் கிரிக்கெட், ஹாக்கியாக இருந்தால் 11 விளையாட்டு வீரர்கள், கபாடியாக இருந்தால் 7 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். கிரிக்கெட்டில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பேட்ஸ்மேன் ரன் எடுத்தாலும், அவர்கள் பவுலர் விக்கெட் எடுத்தாலும், புள்ளிகள் வழங்கப்படும். இதையே இவர்கள் கேப்டனாக தேர்வு செய்பவர்கள் செய்தால் இரட்டிப்பு புள்ளிகள் வழங்கப்படும். புள்ளிகள் அடிப்படையில் முதல் பரிசு கோடி, இரண்டாம் பரிசு சில லட்சங்கள், மூன்றாம் பரிசு சில ஆயிரங்கள் எனப் போகிறது. இந்த சூதாட்டத்தில் சில லட்சம் பேருக்கு அசல் தொகையை திருப்பி தந்து விடுகிறார்கள். காரணம் தொடர்ந்து சூதாட வைத்தால்தான் கல்லா கட்டலாம். விளையாடி தோற்ற மீதமுள்ள பல லட்சம் பேருக்கு, இவர்கள் பாஷையில் பணம் இழக்கும் அபாயம்தான்.

விளையாடுபவர்கள் கட்டிய பணத்தில் 20 சதவீதம் கமிஷன் பெற்றுக் கொண்டு மீதியை அவர்களுக்கே தருவதாக இந்நிறுவனம் சொல்கிறது. இந்த விளையாட்டில் 90 சதவீதம் பேர் பணம் இழப்பார்கள் என்பதுதான் உண்மை. இந்நிறுவனமே பல நூறு அணிகளை தனிநபர் பெயரில் உருவாக்கி போட்டியில் சேர்த்து விடுவதாகவும், இதனால் கம்பெனிக்கே முதல் பரிசு சென்று விடுவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் வருவதுண்டு. இந்நிறுவனம் அதனை தொடர்ந்து மறுத்தும் வருகிறது.

கடந்த 2020&-21 நிதியாண்டு ட்ரீம்-11, ஆண்டு வளர்ச்சி 53 சதவீதம். ஆண்டு வர்த்தகம் 400 மில்லியன் அமெரிக்க டாலர். ஹரிஸ் ஜெயின் மற்றும் பவித் சேத் 2008ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு சிறிய நிறுவனமாக இதை துவக்கினார்கள். ஆண்டு நிகர லாபம் ரூ.327 கோடி. இந்நிறுவனத்தின் இன்றைய அசுர வளர்ச்சி, விளையாட்டு சூதாட்டம் வேகமாக இந்தியாவில் வளர்வதை படம்பிடித்து காட்டுகிறது..

இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் இந்த நிறுவனத்தின் விளையாட்டு நடப்பதாக, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் பொது சூதாட்ட சட்டம்-1867 சரத்துகள் இதற்கு பொருந்தாது எனவும் தீர்ப்பில் சுட்டிகாட்டி இருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் இந்த விளையாட்டு சூதாட்டத்தை பெரிதாக கண்டு கொள்வதில்லை. இதை தடுக்க புதிய சட்டம் இயற்றினால் மட்டுமே தீர்வு. அதற்கான அசைவுகள் அரசுகளிடம் இப்போது இல்லை. நிலைமை உணர்ந்து பெற்றோர்களே உஷாராகுங்கள்! உங்கள் குழந்தைகள் விளையாட்டு சூதாட்டத்தில் சிக்கி சீரழிவதை நீங்கள் தடுத்தால் மட்டுமே உண்டு. ஐ.பி.எல் விளையாட்டு ஆன்லைன் சூதாட்டத்தை வளர்த்து மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழிக்க துவங்கி இருக்கிறது. இது புதிய அபாயம்.

-மன்னை.மனோகரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.