மீன் சந்தை போல காட்சியளிக்கும் ரிசர்வேஷன் சென்டர்… கடும் அவதியில் ஊழியர்கள்… நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்..?
மீன் சந்தை போல காட்சியளிக்கும் ரிசர்வேஷன் சென்டர்… கடும் அவதியில் ஊழியர்கள்… நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்..?
திருச்சி ரயில் நிலையத்தில் மாலை நேரம் கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக யூ டி எஸ் கவுண்டரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் படாதபாடு படுகின்றனர். ஒரு நிமிடம் கூட நகர முடியாத சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். யூ டி எஸ் க்கு ஒதுக்கப்பட்ட மூன்று கவுண்டர்களில் ஒன்று என்கொயரி மற்றும் 2 கவுண்டர்கள் டிக்கெட் கொடுப்பதற்கு ஆகும். இந்நிலையில் யுடிஎஸ் மற்றும் முன்பதிவு கவுண்டர்கள் ஒன்றோடு ஒன்று அருகில் இருப்பதால் முன்பதிவில்லா டிக்கெட் வாங்க வரும் பயணிகள் ரிசர்வேஷன் கவுண்டர்களில் சென்று பயண தகவல் தகவல்களை கேட்டு ECRC ஊழியர்களை நச்சரிக்கின்றனர் , இதனால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது, மேலும் ஒரே இரைச்சலில் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் Sr,DCM/TPJ விற்கு DREUவினர் கமர்சியல் பிரிவில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். யூ டி எஸ் கவுண்டர்களை அதிகப்படுத்த வேண்டும், யூ டி எஸ் கவுண்டர்களை தனியாக பிரித்து தனி கட்டிடத்தில் இயங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.