பிளாஸ்டிக் கவர் உபயோகித்தால் அபாரதம் என்ற அரசு அறிக்கை என்னானது ? மக்கள் சக்தி இயக்கம் !
பிளாஸ்டிக் கவர்கள், சில்வர் கலர் கவர்கள் பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால் 5000 அபாரதம், மீறினால் கடை உரிமம் ரத்து – அரசு அறிக்கை என்னானது? எனற் கேள்வி முன்வைக்கிறது மக்கள் சக்தி இயக்கம்.
உணவகங்களில் இருந்து உணவுப் பொருள்களை பார்சலாக வழங்கும் போது, அவற்றை பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கலர் கவர்களில் கட்டிக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இதனால், உணவுப் பொருள்கள் வேதித்தன்மை ஏற்றம் பெறுவதுடன், அவற்றை சாப்பிடும் நபர்களுக்கு பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உணவககங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் செய்ய பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாயில் கவர்களுக்குத் தடை விதித்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள், சில்வர் கலர் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல்முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை 2024 நவம்பர் 18 தேதி தமிழக அரசு அமுல்படுத்தியது, ஆனால் இதை குறித்து கடைகாரர்களும், பொதுமக்களும் நடைமுறை படுத்தவில்லை, அரசு அறிக்கையுடன் தமது பணி முடிந்தது என நினைக்கிறதா என்று தெரியவில்லை.
திருச்சி மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட தற்பொழுது அதிகமாக பிளாஸ்டிக் கவர்கள் புழக்கத்தில் உள்ளது. முன்பு கடைக்காரர்கள் பயந்து பிளாஸ்டிக் கவர்களை எடுத்து கொடுப்பார்கள். இப்பொழுது தயக்கம் மற்றும் பயம் எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு கொடுக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே தமிழக அரசு பிளாஸ்டிக் கவர்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டுபிடித்து உற்பத்தியை தடுப்பதுடன், கடைகாரர்களும், பொதுமக்களும் பிளாஸ்டிக் கவரில் வாங்க கூடாது என உறுதி செய்யும் அளவிற்கு அபராதமும், தண்டனையும் வழங்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு