நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு? திருச்சி மாநகராட்சி வார்டு 28 ரவுண்ட்அப்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது.

தென்னூர் அக்ரஹாரம், குத்பிஷா நகர், குழுமிக்கரை, அண்ணாநகர், தென்னூர் பிரதான சாலை, மகாத்மா காந்தி பள்ளி சாலை, சிவபிரகாசம் சாலை, ஒத்தைமினார் பள்ளிவாசல் தெரு, புதுமாரியம்மன் கோவில் தெரு, பாரதி நகர், காமராசர் நகர், தென்னூர் பழைய அக்ரஹராம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 28 வது வார்டு. இதன் கவுன்சிலர் பைஸ் அஹமதிடம் அவரின் ஓராண்டு சாதனை குறித்து கேட்டோம்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

அ.பைஸ்அகமது28வது வார்டு, மாமன்ற உறுப்பினர் மாவட்டத்தலைவர், தமுமுக & மமக திருச்சி மேற்கு
அ.பைஸ்அகமது 28வது வார்டு, மாமன்ற உறுப்பினர் மாவட்டத்தலைவர், தமுமுக & மமக திருச்சி மேற்கு

ரூ.40 லட்சம் மதிப்பில்…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கவுன்சிலராக எனது பணி சிறப்பாக நடைபெற பேருதவியாக இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன், கமிஷனர் வைத்திநாதன்,
கோட்டத்தலைவர், அரசு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மக்கள் நலப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி தென்னூர் குத்பிஷா நகர் பகுதியில் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் புதிய சமையற்கூடம் மற்றும் கழிப்பிடம் 40 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குத்பிஷா நகர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமை யில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது.

புதிய கான்கிரீட் சாலை…
தென்னூர் அக்ரஹாரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரிட் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பட்டிற்காக திறந்து வைக் கப்பட்டுள்ளது. தென்னூர் குழுமிக்கரை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சுகாதார நிலைய கட்டிடம் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அப்துல் சமது எம்.எல்.ஏ. அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ரூ.4 கோடியில் தார்சாலை வசதி…

திருச்சி 28-வது வார்டுக்குட்பட்ட பிரதான சாலைகள், அண்ணாநகர் 1&6வது சாலைகள், வஉசி சாலை, பாரதியார் தெரு, விவேகானந்தர் தெரு, கம்பர் தெரு, இளங்கோவடிகள் சாலை, கண்ணதாசன் சாலை, உக்கிரகாளியம்மன் கோவில் 2வது தெரு, தென்னூர் ஹைரோடு முதல் தென்னூர் மேம்பாலம் மகாத்மா காந்தி பள்ளி சாலை மற்றும் சிவப்பிரகாசம் சாலை, தெருக்களில் ரூ.4 கோடி மதிப்பில் தார்சாலை போடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஒத்தைமினார் பள்ளிவாசல் தெருவில் மாமன்ற உறுப்பினர் வார்டு நிதியில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் சிறுபாலம் அமைத்து தரப்பட்டுள்ளது.

சின்டெக்ஸ் டேங்க்…

புதுமாரியம்மன் கோவில் தெருவில் மாமன்ற உறுப்பினர் வார்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பொருத்தி 2000 லி கொள்ளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வைத்து தண்ணீர் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.

நீண்டநாள் கோரிக்கை…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பாரதி நகர் குறுக்குத் தெருவில் நீண்ட நாள் கோரிக் கையான கழிவு நீர் குழாய், மழை நீர் வடிகால் ரூ.1 லட்சம் மதிப்பில் அமைத்து தெருவில் கான்கிரிட் தளம் அமைத்தும் மக்கள் பயன்பாட்டுக்கு புதுப்பித்து தரப்பட்டுள்ளது.

பேட்ஜ் ஒர்க்…

அண்ணா நகர், காமராஜ் நகர் பகுதியில் ரூ.1. லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைத்தும் அதே தெருவில் பேட்ஜ் ஒர்க் செய்தும் மக்கள் சிரமமின்றி சென்று வர பாலம் அமைத்து தரப்பட்டுள்ளது. தென்னூர் பழைய அக்ரஹாரம் தெருவில் பேட்ஜ் ஒர்க் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
ஜொலிக்கும் வார்டு… மின்விளக்கு ஒளி குறைந்து காணப்பட்ட இடத்தை அடையாளம் கண்டும், மின் விளக்குகள் இல்லாத இடத்தில் புதிய மின் விளக்குகள் 90ஷ் / 60ஷ் / 40ஷ் சுமார் – 90 எண்ணிக்கையில் வார்டு முழுவதும் குறிப்பாக (அப்துல் கலாம் நகரில்) 15 ஆண்டு காலமாக தெருவிளக்குகள் இல்லாத இடத்தி
லும் மின் விளக்குகள் மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக பொருத்தப்பட்டது. 28வது வார்டு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடை பெற்று வருகிறது.

எம்.பி. மற்றும் எம்எல்ஏ நிதியுதவி…

28வது வார்டு தென்னூர் அண்ணாநகர் பகுதியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. (விரைவில் சமுதாய கூடம் கட்டப்பட
இருக்கிறது ). தென்னூர் குழுமிக்கரை பகுதியில் உள்ள பாழடைந்த கழிவறையை அகற்றிவிட்டு ரூ-38.50 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கழிவறை கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணா நகர் பகுதியில் அமுதம் நியாகவிலைக்கடைக்கென ரூ.11 லட்சம் மதிப்பில் நிரந்தர கட்டிடம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.38 லட்சம் செலவில்…

புதுமாரியம் மன் கோவில் மாநகராட்சி சத்துணவு கூடத்திற்கு புதிய சமையற்கூடம் மற்றும் பொருட்கள் வைப்பறை கட்டிடம் ரூ. 38 லட்சம் செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தூய்மைக்கு பரிசு…

வார்டு மக்கள் தங்கள் பகுதியை தூய்மையாக பராமரித்து வைப்பவருக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கிறேன்.
ஆதரவற்றோருக்கு உணவு… மேலும் விழாக் காலங்களில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று கட்சி சார்பாக உணவு வழங்கி வருகிறோம். எனது வார்டில் அவ்வப்போது பொதுமக்களின் நலன் கருதி மருத்துவ முகாம் களை நடத்தி வருகிறேன்.


போன் செய்தாலே போதும்…
28 வது வார்டு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் வார்டு முழுவதும் நடை பெற்று வருகிறது. மேலும் அன்றாட மக்கள் பிரச்சனைகளை தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் உடனடி யாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளேன். இறைவன் உதவியோடு இன்னும் சிறப்பாக பணி செய்ய இருக்கிறேன் என தெரிவித்தார்.

– நிஷா, சந்திரமோகன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.