நிரந்த மருத்துவர்கள் இல்லாமல் முதல்வர் திறந்து வைத்த திருச்சி நகர்ப்புற நல வாழ்வு மையம் !

இம்மையத்திற்கு தற்போது வரை நிரந்தர மருத்துவர், செவிலியர் நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக வேறு பணியில் இருக்கும் மருத்துவரும், செவிலியரும் வருகை புரிந்து காலை வேளையில் மட்டுமே,

0

அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

நிரந்த மருத்துவர்கள் இல்லாமல் முதல்வர் திறந்து வைத்த திருச்சி நகர்ப்புற நல வாழ்வு மையம் !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.23ல் நகர்ப்புற நல வாழ்வு மையம் (உறையூர் குறத்தெரு) கடந்த 06.06.2023 ல் தமிழக முதல்வரால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது.

2

இந்நிலையில் இம்மையத்திற்கு தற்போது வரை நிரந்தர மருத்துவர், செவிலியர் நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக வேறு பணியில் இருக்கும் மருத்துவரும், செவிலியரும் வருகை புரிந்து காலை வேளையில் மட்டுமே, மருத்துவம் பார்க்கின்றனர். 50 பேர் வரை காலையில் மட்டும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மாலை நேரத்தில் திறப்பதில்லை.

மேற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதாலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 23வது வார்டு நகர்ப்புற நல வாழ்வு மையத்திற்கு காலை, மாலை இருநேரமும் வருகை தந்து சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர், செவிலியர் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

3

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.