அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு ! 32 பேர் புதுமுகங்கள் – எடப்பாடியின் துணிச்சல் !

புரட்சி பாரதம் , பார்வாடு பிளாக் கட்சி கேட்டிருந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகின்றது. இதனால் இந்த இருகட்சிகளும் கூட்டணியில் தொடர்வர்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

0

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு ! 32 பேர் புதுமுகங்கள் – எடப்பாடியின் துணிச்சல் !

அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இன்று (21.03.2024) புதுச்சேரி தொகுதிகளையும் உள்ளடக்கி 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத்திற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி என்பவர் போட்டியிடுகின்றார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் :

4 bismi svs

1. ஸ்ரீபெரும்புதூர் – டாக்டர் பிரேம்குமார்

2. வேலூர் – எஸ்.பசுபதி

3. தர்மபுரி – டாக்டர் அசோகன்

4. திருவண்ணாமலை – கலியபெருமாள்

5. கள்ளக்குறிச்சி – குமரகுரு

6. நீலகிரி – லோகேஷ் தமிழ்செல்வன்

7. கோவை – சிங்கை ராமச்சந்திரன்

8. திருச்சி – கருப்பையா

9. மயிலாடுதுறை – பாபு

10. சிவகங்கை – சேவியர் தாஸ்

11. திருப்பூர் – அருணாச்சலம்

12. பெரம்பலூர் – சந்திரமோகன்

13. கன்னியாகுமரி – நசரேத் பசிலியான்

14. தூத்துக்குடி – சிவகாமி வேலுசாமி

15. பொள்ளாச்சி – கார்த்திகேயன்

16. நெல்லை – சிம்லா முத்துசோழன்

17. புதுச்சேரி – தமிழ்வேந்தன்

 

- Advertisement -

- Advertisement -

விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – ராணி

அதிமுக புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகளின் விவரம் – 1.திருவள்ளூர் (தனி), 2.மத்திய சென்னை, 3.கடலூர், 4.தஞ்சாவூர், 5.விருதுநகர். அதிமுக கூட்டணியில் உள்ள SDPI கட்சிக்குத் திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இணைந்திருந்த புரட்சி பாரதம் கட்சிக்குத் திருவள்ளூர் தொகுதி வழங்கப்படவில்லை. கூட்டணியில் இணைந்துள்ள பார்வாடு பிளாக் கட்சி இராமநாதபுரம், தேனி தொகுதிகளைக் கேட்டிருந்திருந்து. அந்தத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகின்றது. இதனால் இந்த இருகட்சிகளும் கூட்டணியில் தொடர்வர்களா? என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.