‘அடடே’ சினேகா, ‘அய்யய்யோ’ மாளவிகா

-மதுரையான்

0

நடிகர் பிரசன்னாவைக் காதலித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும், சினிமாவிலும் விளம்பரப் படங்களிலும் செம பிஸியாகத் தான் இருக்கார் மாஜி ஹீரோயின் சினேகா. சில விளம்பரப் படங்களில் சினேகாவைப் பார்த்த அவரது நண்பிகள், ”சதை ரொம்ப போட்டு, குண்டா தெரியுற, உடம்பை ‘சிக்’குன்னு வச்சுக்கோ, ஹீரோயின் சான்ஸ்கூட வரும் புடிச்சுக்கோ” என ஜில் அட் வைஸ் பண்ணியதும் குளிர்ந்து போன சினேகா ஜிம்முக்குப் போய் உடம்பைக் குறைத்து, இப்போது பாவாடை-தாவணியில் பளிச்சென இருக்கிறார்.

‘விரும்புகிறேன்’, ‘ஆனந்தம்’ படங்களில் இருந்ததைப் போல, இப்பவும் எல்லாரும் விரும்பும்படி இருக்கும் சினேகாவுக்கு தனுஷின் ‘பட்டாஸ்’படத்துக்குப் பிறகு ஹீரோயின் சான்ஸ் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு” என்கிறார் சினேகாவின் பி.ஆர்.ஓ.வான ஜான்.  சினேகா அடடே என ஆச்சர்யப்பட வைத்தால், ”கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு” மாளவிகாவோ ‘அலற வைக்கும் விதமாக கன்னமெல்லாம் வீங்கிப் போய், முகமெல்லாம் கிழடு தட்டிப் போன மாதிரி,

போட்டோ ஷூட் ஸ்டில்களை ரிலீஸ் பண்ணி ரசிகர்களை நடுநடுங்க வைக்கிறார். மும்பையில் செட்டிலாகிவிட்டாலும் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர (அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர் களுக்குத் தானுங்க) வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில தான் பி.ஆர்.ஓ.ரியாஸ், இந்த ஸ்டில்களை ரிலீஸ் பண்ணிருப்பார் போல.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.