417-வது படமாக இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டி ருக்கிறார் இளையராஜா. அவரின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான ராயல்டியை முறையாகவும் முழுமையாகவும் ராஜாவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய நிறுவனம்.
அதனால் இப்ப ராஜாவின் காட்டில் வருமான மழை தான். இதனால் கிட்டத்தட்ட 25 ஆண்டு களுக்குப் பிறகு, தனது சினிமா
தயாரிப்பு நிறுவனமான பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் படம் தயாரிக்கலாம் என்ற ஆசையுடன் ரஜினி சாமியை அணுகியுள்ளார் இளையராஜா சாமி. “நீங்க படம் தயாரிக்கிறது ரொம்ப சந்தோஷம் தான் சாமி, ஆனா சாமி நம்மளோட சம்பளம் (இப்ப ரஜினியின் சம்பளம் 120சி என்கிறார்கள்) உங்களுக்கு கட்டுபடியாகாது சாமி” எனச் சொல்லிவிட்டாராம் ரஜினி.
அடுத்து விஜய்யிடம் பேசிய போதும் இதே பதில் (விஜய்யின் சம்பளம் 100சி என்கிறார்கள்) தான் வந்ததாம்.