அவனும் அவளும் – தொடர் – 2

0

அவனும் அவளும் – தொடர் – 2

கொஞ்சம் கூட அவன் இதை எதிர்பார்க்கல . கையில டிராவல் பேக்கோடு அவ நிக்குற கோலத்துலயே தெரிஞ்சு போ ச்சு, நடக்கப் போறது சாதாரண சமாச்சாரம் இல்லை . ஏதோ  நம்மள  வச்சி செய்யப்போகுதுன்னு!.. ராத்திரி 11 மணி, தெருவுல ஆள் நடமாட்டமே இல்லை .

அவன் வீட்டு வாசப்ப டியில காலையில கல்யாணம் பண்ணின காதலி கண்ணீரோடு நிக்குறா!… நியாயப்படி பார்த்தா அவ கண்ணு தண்ணியை துடைச்சுவிட்டு அவன் ஆறுதல் சொல்லியிருக்கணும். ஆனா, நடக்குற சமாச்சாரத்தை பார்த்து அவன் கண்ணுலேயே தண்ணி முட்டிக்கிட்டு நிக்கிதே ! ஆம்பிளை ஆளுவக்கூடாதுங்குற ஆயிரங்கால வழக்கம் அவனை ஆசுவாசப்ப டுத்தி அமைதியாக்குது.

“நல்லவேள எங்க அம்மா , அப்பா ரெண்டுபேரும் ஊருக்கு போயிருக்காங்க . நாளைக்கு தா ன் வருவாங்க . அவங்க இருக்குறப்ப மட்டும் இந்த மாதிரி நீ வந்து நின்னுருந்தன்னா சீன் ஆயிருக்கும்”ன்னு பைய ன் டரியல் ஆவுறான். “அதுசரி… வீட்டுக்கு வந்தவளை இப்படித்தான் வாசப்படியிலயே நிக்கவச்சி பேசுவியா ? எனக்கு ஏற்கனவே சளி புடிச்சிருக்கு. இந்த குளிர்ல நான் இன்ன கொஞ்சம் நேரம் நின்னேன்னா , நாளைக்கு காலையில ஹாஸ்பிட்டல்ல தான் அட்மிட் ஆகணும். வா உள்ள போய் மத்ததை பேசலாம்”னு அந்த ராத்திரியிலயும் மறக்காம வலது கால எடுத்துவச்சி வீட்டுக்குள்ள போறா… நடக்குற கூத்தையெல்லாம் பார்த்து மிரண்டு போனவன் கதவை சாத்திட்டு அவ காலுல விழுந்து அழாத குறையா பேச ஆரம்பிக்குறான்.

- Advertisement -

- Advertisement -

“ஏன் டி…. நீ தானே சொன்ன . நம்ம கல்யாணம் சம்பந்தமா வீட்ல பேசி சம்மத ம் வாங்குற வரைக்கும் அவங்கவங்க வீட்ல இருக்கலாம்னு. காலையில ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல கூட சொன்னியேடி” ங்குறான். “எங்க அம்மா நம்ம கல்யாணத்தை கண்டிப்பா ஏத்துக்க மாட்டா !… கடைசிவரை நாம போராடிக்கிட்டு இருக்கவேண்டியது தான். நம்ம என்ன தியாகியா !… எனக்குன்னு ஒரு வாழ்க்கை அதை நான் தான் முடிவு பண்ணனும். முடிவு பண்ணிட்டே ன். அதான் மூட்டை முடிச்சை கட் டிக்கிட்டு வந்துட்டேன். இனிமேல் இங்கதான் இருப்பேன்” ன்னு ஒரு பெ ரிய இடியை அவன் தலையில இறக்குறா!.. எந்த சமாதானமும் சொல்லி அவளை சமாதானப்படுத்த முடியாதுன்னு தெ ரிஞ்சு அவன் ஒரு முடிவுக்கு வர்றா ன்.

“ஓக்கே , ஒன்னு பண்ணலாம். எங்க வீட்டுலயும் நம்ம விஷயத்துக்கு ஒத்துக்கலன்னா நம்ம நடுத்தெருவுல தான் நிக்கணும். அதனால , ஒருவாரம் நீ ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணு. அதுக்குள்ள நான் ஒரு வாடகை வீடு பாக்கிறே ன். நம்ம பிரச்சினை சரியாகுற வரை அங்க இருப்போம்”ங்குறான். புருசனோட புத்திசாலித்த னத்தை நினைச்சு கட்டிப்புடிச்சி பாராட்டுறா அவ!… அதுவரை பய த்துல இருந்தவனுக்கு, அவ கட்டிப் புடிக்கையும் எங்கிருந்தோ வந்து ஒரு ஃபீலிங் ஜிவ்வுன்னு ஏறி அவன் தலைக்குள்ள வந்து உட்கார்ந்துக்குது.

அடிக்கிற பனியில, வீட்டுக்குள்ள சுத்துற பேனோட காத்து ஓசியிலயே ஊட்டியில இருக்க ஃபீலை உண்டாக்குது. எப்படிடா ஆரம்பிக்குறதுன்னு அவன் தயங்கி அவ முகத்தை பாக்குறான். அவ முகத்துலயும் அதே தயக்கம் இருக்கதை பார்த்த உடனேய பயலுக்கு அவ்வளவு சந்தோஷம். கிடை ச்சிடுச்சிடா க்ரீன் சிக்னல்ன்னு! அவளை அப்படியே அள்ளிக்கிட்டு போய் மெத்தையில போட் டு ரொப்புறான். அவ தலையில இருக்குற ஜாதிப்பூ வாசம் அவனை கொஞ்சம் கொஞ்சமா கிரக்க நிலைக்கு தள்ளுது. அதுவரைக்கும் நல்லவனாக இருந்தவன் அப்படியே கெட்டவனாகி போறான். ரெ ண்டு உடம்புக்கு நடுவுலயும் காத்துகூட போயிறக் கூடாதுங்குற அளவுக்கு அவளை கட் டி அணைக்குறான்.

அணைக்க அணைக்க ரெண்டு பேருக்குள்ள யும் பத்திக்கிட்டு எரியுது. சினிமாவுல வர மாதிரி லைட் அணைக்குற சீன் எல்லாம் அங்க இல்ல … வெளிச்சத்துலயே எல்லா வேலையும் நடந்து முடியுது. நைட் டு 12 மணிக்கு ஆரம்பிச்சது காலையில 3 மணிக்கு முடியுது. இதுபோதும்டா சா மி!.. இப்பவே உசிரை உட்றுவேங்குற அளவுக்கு உச்சஸ்தாதியில இருக்கான் பய . உன்னை நான் விடவே மாட்டேன்னு அவனை போர்த்திக்கிட்டு தூங்கிப் போறா அவ.. காலையில 5 மணிக்கு அலாரம் கத்தி ஊரை கூட்டுது. பதறிப்போய் ரெண்டு பேரும் எந்திரிக்குறாங்க .

4 bismi svs

“எங்க அம்மா , அப்பா வர்றதுக்குள்ள சீக்கிரமா கிளம்பு. நான் சாயங்கா ம் வந்து உன்னை பாக்குறே ன்”ன்னு பைய ன் அவசரப்படுத்துறான். அவளும் நைட்டு தூக்கியெறிஞ்ச துணியை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சி கிளம்பி ரெடியா கிட்டா . வீட்டு வாசப்படிக்கிட்ட கதவை திறந்து வெளியேறுறதுக்கு முன்னா டி அவனை கட் டிப்புடிச்சி அழுத்தமா ஒரு முத்தம் தர்றா . ‘இந்த ராத்திரி ஏன் இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சி போயிடுச்சு.

இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கக் கூடாதுன்னு’ பையனுக்கு உடம்புக்குள்ள உள்ள செல் எல்லாம் ஓவரா எமோஷனல் ஆகுது. கதவை த் திறக்கலாம்னு போனவனுக்கு பெரிய ஷாக் !.. வெளியூருக்கு போன அம்மா , அப்பா கதவுக்கு வெளிய வெயிட்டிங். ரெ ண்டு பேருக்குள்ளயும் இருந்த லவ் மூட் இடம் தெ ரியாம ஓடி ஒழிஞ்சுப் போகுது. வசமா மாட்டிக்கிட்டாய்ங்க! ஹால்ல நாலு பேரும் உட்கார நாட்டாமை இல்லாமலேயே பஞ்சாயத்து ஆரம்ப மாகுது. “அப்பா நாங்க ரெண்டு பேரும் நேத்து தான் ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

நீங்க ஊர்ல இருந்து வந்ததும் நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை ப் பத்தி பேசலாம்னு இருந்தேன்”னு கன்னத்துல லிப்ஸ்டிக்கும், குங்குமமும் ஒட்டிக்கிட்டு இருக்கது தெரியாம விளக்கம் சொல்றா ன். ஒரே பையன் அவனோட வாழ்க்கை சம்பந்தமா நாம கண்ட கனவு எல்லாம் மண்ணாகிப்போச்சின்னு பேச்சு மூச்சு இல்லாம பெத்த வங்க உம்முனு இருக்காங்க . சரின்னு வே ற வழியில்லாம நாகரீகமா ஒரு ரிஷப்ஷ ன் வச்சிடலாமுன்னு ஒரு முடிவுக்கு வர்றாங்க . பொண்ணு அம்மா கிட்ட போய் பேசுறாங்க .

பையனும் அவனோ ட பெத்தவங்களும். பொன்னோட அம்மாவுக்கு தாங்கிக்க முடியாத கோவம். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் , “என் பொண்ணை கடத்திட்டு போய் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணப் பாக்றாங்க “ன்னு கம்ப்ளைண்ட் கொடுக்குறா. நாங்க ஏற்கனவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். எங்கள ஒன்னும் பண்ண முடியாதுங்குற ரேஞ்சிக்கு பக்காவா போலீஸ்கிட்ட டாக்குமெண்ட்டை காமிக்குறான் பையன். இதெல்லாம் பார் த்து கோவப்பட்ட பொண் னோட அம்மா , “இவ இனிமே ல் என் பொண்ணே கிடையாது”ன்னு போலீஸ்ல எழுதிக் கொடுத்திட்டு, மருமகனையும் சம்மந்திகளயும் அச்சில ஏத்த முடியாத அளவுக்கு அசிங்க அசிங்கமா பேசிட்டு கெள ம்புறா!… இதெல்லாம் நமக்கு தேவையா ன்னு! பையனோட அம்மா .

அப்பா உச்சக்கட்ட கோவத்துல இருக்காய்ங்க. பையனோ ட யோக்கிதை தெரிஞ்சா சொந்தபந்தங்க நம்ம மூஞ்சில காறித் துப்புவாய்ங்கன்னு. ‘எம் பைய ன் ஆசப்ப ட்ட பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்னு இருக்கோம்’ன்னு ரிஷப்ஷனுக்கு பத்திரிக்கை அடிக்குறாய்ங்க. ஸ்டீபன் weds செள மியா -ன்னு பத்திரிக்கை அடிச்சி சொந்தக்காரங்களுக்கெல்லா ம் கொடுக்குறாங்க . கோயம்புத்தூர் காந்திபுரத்துல உள்ள ஷீலா பேல ஸில் தடபுடலாக ரிஷப்ஷன் நடந்து முடியுது.

பக்கத்துல தானே ஊட்டி இருக்குன்னு ஹனிமூனுக்கு ஊட்டிக்கு கிளம்புதுங்க புதுசா கல்யாணம் ஆன ஜோ டி. எல்லா பிரச்சினையையும் மறந்து ரெண்டா வது முறை யும் சிறப்பா நடந்து முடியது அந்த (!) சமாச்சாரம். ஊட்டியில தான் சொர்க்கம் இருக்குன்னு கூட்டா ளிங்க சொன்ன உண்மைதான்னு பையன் ஒருவாரம் ஊட்டியை விட்டு வரலை. வெளிய வந்தா குளுவுறும்னு ரூமை பூட்டிக்கிட்டு பொண்டாட்டியை போத்திக்கிட்டு தூங்குறான். ஊட்டி சொர்க்கமுன்னு அவனுக்கு தெரியும்.

ஆனா, ஊட்டியிலிருந்து கிளம்புனதுக்கு அப்புறமாக நாம போய் சேரப் போறதுன்னு நரகமுன்னு அப்போ அவனுக்கு தெரியல . அவன் வாழ்க்கையோட சந்தோஷம் எல்லா ம் ஊட்டி குளிர்லயே உறைஞ்சு போய்டுது!…

-ந.கிருஷ்வின்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.