அவனும், அவளும் – தொடர் – 3

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

அவனும், அவளும் – தொடர் – 3

யாருக்கிட்டயும் சொல்ல முடியாம, மனசுக்குள்ளயே வெடிச்சி அழுதுகிட்டு இருந்த சென்பா, அந்த அழுகைய கண்ணீருல வடியவிட்டுட்டு, கூனிக்குறுகி கடைசியில அந்த வார்த்தையை சொல்றா,

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

“நான் முழுகாம இருக்கேன்!”ன்னு…

இந்த வார்த்தையை கேட்டவுடனேயே கட்டி அணைக்குற அளவுக்கு சந்தோஷம் வரணும். ஆனா, வெட்டி வீழ்த்தணும்கிற கோவத்துல கண்ணு செவக்க அமைதியா இருக்கான் கெளதம்.

3

எதுவுமே பேசாம கடந்துபோன அஞ்சு நிமிஷ மவுனத்துக்குப் அப்புறம், “கருவை கலைச்சிடு… பிரச்சினை ஓவர்” சிம்பிளா சொல்லிட்டு, அவ முகத்தை பார்க்காம சர்ருன்னு கெளம்பி போயிடுறான்.

அதுவரை குழப்பத்துல இருந்தவ ஒரு தெளிவான முடிவுக்கு வர்றா!… சென்பாவும், கெளதமும் ஒரே யுனிவர்சிட்டியில் அசிஸ்டன்ட் புரொபசராக வேலை பாக்குறாங்க. சென்பா பயாலஜி டிபார்ட்மெண்ட்; கெளதம் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட். ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 30-32 வயசு தான் இருக்கும்.

4

கெளதம் ஒரு உம்மனாம்மூஞ்சி… யாருக்கிட்டயும் கலகலன்னு பேசமாட்டான். ஆனா, தன் துறை சார்ந்த படிப்பில் அவன் கோல்ட் மெடல் வாங்கியவன். தமிழ்நாட்டு வெயில் அவன் கலரை கொஞ்சம் பதம் பாத்திருக்கு. இல்லைன்னா, ஒருவேளை அவனும் எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னியிருப்பான். பஸ்ஸில ஏறுனா, கம்பியை எட்டி பிடிக்க முடியாத அளவுக்கு தான் உயரம். ஆனா, நம்மாளு தான் மாசம் லட்சத்துல சம்பளம் வாங்குறவர் ஆச்சே, ‘எட்டாரா ப்ரீஷா’ கார்ல சோக்கா யுனிவர்சிட்டியில வந்து இறங்குவார்.

கெளதம் மாதிரியே சென்பாவுக்கும் ஆறு இலக்க சம்பளம். நல்ல வசதியான குடும்பம் வேற. ஆள் பார்க்க நடிகை நதியாவுக்கு கொஞ்சம் கருப்பு கலர்ல மேக்கப் போட்ட மாதிரி இருப்பா. எல்லார்கிட்டயும் நல்லா கலகலன்னு பேசுவா. அவ முகத்துல அஞ்சு நிமிஷத்துக்கு மேல சோகத்தை தங்க விட மாட்டா. அடிச்சி வெரட்டிடுவா…

சென்பாவும், கெளதமும் அந்த யுனிவர்சிட்டியில கல்யாணம் ஆகாத புரொபஸர்ஸ். அதனால, பக்கத்து ஸ்டேட்ல எதாவது பயிற்சி முகாம் நடத்துச்சினா, இவங்களை தான் யுனிவர்சிட்டி நிர்வாகம் அனுப்பி வைக்கும்.

இப்படி பக்கத்து ஊரு, பக்கத்து ஸ்டேட்டுன்னு யுனிவர்சிட்டி சார்பா இவங்க பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ரெண்டு பேருக்குள்ளயும் நட்பு உண்டாகுது.

அப்படி ஒருநாள் கனடா நாட்டுல நடக்குற கருத்தரங்கில் கலந்துக்க யாரை அனுப்பலாம்னு யுனிவர்சிட்டி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கு. புரொபஸர்ஸ் பாதி பேர் குடும்பஸ்தர்கள் என்பதால் முடியாதுன்னு சொல்லிடுறாங்க.
சென்பாவும், கெளதமும் எந்த பிரச்சினையுமில்லைன்னு சொல்ல, அவங்க ரெண்டு பேருக்கும் கனடாவுக்கு டிக்கெட் ரெடியாகுது.

சென்னை விமான நிலையம்!… அதுவரை யுனிவர்சிட்டிக்கு சேலைகட்டிட்டு வந்த சென்பாவை, அன்னைக்கு தான் சுடிதார்ல பாக்குறான் கெளதம். அந்த சுடிதார் அவளோட அங்க அழகை அப்படியே இஞ்ச் பை இஞ்சாக காட்டுது. ஒரு அஞ்சு நிமிஷம் சென்பாவை பார்த்து நிதானமிழந்து போறான்.

செக்கிங் முடிஞ்சி ரெண்டு பேரும் லக்கேஜை எடுத்துக்கிட்டு கெளம்புறாங்க. ஃபிளைட்டும் கிளம்புது. ரெண்டு பேருக்குமே இதுதான் முதல் வெளிநாட்டு பயணம். விமான பயணமும் கூட!…

சில்லுன்னு உறைய வைக்குற ஏ.சி.காத்துல, ஃபிளைட் ஜன்னல் வழியா கீழ இருக்க உலகத்தை சென்பாவும், கெளதமும் கொழந்தை மாதிரி ரசிச்சி பார்க்குறாங்க. முதல் விமானப் பயணம் என்பதால், பல வருஷத்துக்கு முன்னாடி படிச்ச ஃபிளைட் ஆக்ஸிடெண்ட் சம்பவம் எல்லாம் ரெண்டு பேருக்கும் கண்ணு முன்னாடி வந்துபோகுது.

பயத்துல ரெண்டு பேரும் ஒரே சீட்டுல ஒட்டிக்கிட்ட மாதிரி பயணிக்குறாங்க. இதுவரைக்கும் ரெண்டு பேரும் யுனிவர்சிட்டி சார்பாக, பல இடங்களுக்கு போயிருக்காங்க. அப்ப எல்லாம், அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான உணர்வு வந்ததில்லை.

35 ஆயிரம் அடி உயரத்துல ரெண்டு பேருக்கும் அன்யோன்யம் உண்டாகுது. வானத்துல மெதக்குற மாதிரி ஒரு உணர்வு இருக்குன்னு சொல்லுவாங்களே!…. அதையும் தாண்டுன உணர்வு இப்ப ரெண்டு பேருக்குள்ளயும் றெக்கை கட்டி பறக்குது. அந்த உணர்வுல லயிச்சி சொக்கி, தூங்கிப் போறாங்க.

ஒருவழியா எந்தவித அசம்பாவிதமும் நடக்காம, தப்பிச்சோம்டா சாமின்னு!…. கனடாவுல ரெண்டு பேரும் இறங்குறாங்க.

கனடாவுலயே பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலான, “ஃபெய்ர்மாண்ட் பசிஃபிக் ரிம்”ல ரூம் புக் பண்றாங்க. ஒரு நைட்டுக்கு நம்ம ஊர் காசுக்கு வெறும் 32 ஆயிரம் சொச்சம் தான். கனடிய அழகிகள் கைகூப்பி வரவேற்று, ரூம் நம்பர் 302-ஐ நோக்கி அனுப்பி வைக்கின்றனர்.

சுண்டி விட்டா சும்மா ரத்தம் வர்ற அளவுக்கு, அவன் கண்ணு முன்னாடி வெளிநாட்டு பொண்ணுங்க இருக்காங்க. கருப்பா இருக்கவங்களை பார்த்தா வெளிநாட்டு காரிங்களுக்கு வெறி ஆகும்னு கேள்விப்பட்ருக்கான். ஆனா, இவன் கண்ணு எல்லாம் சென்பாவை விட்டு எங்கயும் போகலை.

ரூம் நம்பர் 302-க்கு வந்தாச்சு. உள்ள நுழைஞ்ச உடனேயே லேவண்டர் ஃபிளேவர் வாசனை ரூம் முழுக்க வீசுது.

‘நான் குளிச்சிட்டு வந்துர்றேன்’னு பாத்ரூமுக்குள்ள நுழையுறா சென்பா… பாத்ரூம் முழுக்க பளிங்குக் கல் தான். அந்த பாத்ரூம்ல ஆறு அடிக்கு ஒரு கண்ணாடி. அந்த கண்ணாடியில அவ முழு உடம்பையும் குவிச்சி பாக்குறா!…. அவளோட வாளிப்பான தேகம், அவளுக்கே ஒரு வெக்கத்தை உண்டாக்குது. பாத்டப்ல படுத்தவ வெக்கத்தையும், ஏக்கத்தையும் ஒருசேர ஒடம்புல தேச்சி குளிச்சி ஒருவழியா இருபது நிமிஷம் கழிச்சி வெளிய வர்றா!…

அவ கதவை தெறந்து வெளிய வந்ததை பார்த்த கெளதம் தறிகெட்டு போறான். கனடாவுல வந்து தான் நான் கன்னி கழியணும்னு இருக்கு போலன்னு மனசுக்குள்ள கெறங்கி போறான்.

அவளோட சம்மதத்தை கொஞ்சம் கூட கேக்காம, அவளை அப்படியே கட்டி அணைச்சு, பாத்ரூமுக்குள்ள தூக்கிக்கிட்டு போறான். அவ மட்டும் தனியா குளிச்ச அந்த பாத்டப்ல, இப்ப ரெண்டு பேரும் ஒன்னா குளிக்குறாங்க. இவங்க அடிக்கிற கூத்தை பார்த்து கழட்டி போட்ட ட்ரஸ் எல்லாம் கண்ணை மூடிக்குது.

அரைமணி நேரத்துல ரெண்டு பேரும் ஒன்னாகி போறாங்க. பெட்ரூம் போற வரைக்கும் பொறுமையில்லாம, பாத்டப்லயே எல்லா சமாச்சாரமும் நடந்து முடியுது. எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாம, கனடாவுல பாத்டப்ல நடந்த இந்த சம்பவம் தான் இன்னைக்கு சென்பாவை கண்ணீர் விட வச்சிருக்கு!..

“என் வயித்துல இருக்க குழந்தைக்கு நீ தான் அப்பன்”ன்னு சொல்லியும் கெளதம் என்னை உதாசீனப்படுத்திட்டானேன்னு!… கலங்கி நிக்குறா…

வீட்டுல சொன்னா கொன்னுடுவாங்க. வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடும். கெளதம் என்னடான்னா, ‘குழந்தையை கலைச்சிடு’ன்னு சொல்றான். பேசாம குழந்தையை கலைச்சிடுவோமான்னு யோசிக்குறா!…

அரளிக்கொட்டை, பூச்சி மருந்து, தூக்குல தொங்குறதுன்னு பல விஷயங்களை தாண்டி கொடுமையான விஷயம் ஒன்னு இருக்கு. அதுதான் எல்லா பிரச்சினையையும் கடந்து போராடி வாழ்றது.

போராடி வாழணும்; என் குழந்தை இந்த மண்ணுல பொறக்கணும்னு வைராக்கியமா ஒரு முடிவுக்கு வர்றா!…

ஆனா, இந்த முடிவு அவ வாழ்க்கையையே முடிச்சிடும்னு அவளுக்கு கடைசிவரை தெரியாமப் போச்சு!….

தொடரும்…

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.