டைரக்டரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான கரு.பழனியப்பன் ‘மந்திரப் புன்னகை’ என்ற படத்தை எடுத்து முடித்திருந்த நேரத்தில் ‘கள்ளன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். இதன் கதை,-திரைக்கதையை எழுதி டைரக்ட் பண்ணியிருந்தார் எழுத்தாளர் சந்திராதங்கராஜ். சிலபல காரணங்களால் தாமதமாகி, கடந்த 18-ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீசானது ‘கள்ளன்’.
படத்தைப் பற்றிய விமர்சனத்தையோ, படம் சொல்லும் சேதியைப் பற்றியோ நாம் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்ப பிரச்சனை என்னன்னா, ”படத்தின் டீசர் வெளியான போது, இது ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றிக் குறிப்பிடுவதாக எண்ணிக் கொண்டு, அந்த சாதி அமைப்பிலிருந்து சிலர் தன்னை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்கள்” எனச் சொல்லியிருந்தார் சந்திரா தங்கராஜ்.
இப்போது படத்தைத் தூக்கும்படி தியேட்டர்காரர்களை மிரட்டுவதோடு, எனது செல்போன் நம்பரில் வந்து ஆபாசமாக வசைபாடுகிறார்கள். ஒரு பெண் டைரக்டரான நான் ‘கள்ளன்’ என்ற பொதுவான வார்த்தையை டைட்டிலில் வைத்தது குத்தமாய்யா?” என பட ரிலீசான அன்றே பிரஸ்மீட்டில் கண்ணீர் சிந்தினார் சந்திரா தங்கராஜ்.